682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

மதுரை சித்திரை திருவிழாவில் தேனூர் கிராமத்தினருக்கு பழைய வழக்கப்படி மரியாதை தராததை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை சித்திரைத் திருவிழா சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு தேனூரில் நடைபெற்றது. மன்னர் திருமலை நாயக்கர் அதனை மதுரைக்கு மாற்றினார்
அப்போது தேனூர் கிராமத்தினருக்கு சித்திரை திருவிழாவில் உரிய மரியாதை தரப்படும் என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், மரியாதை வழங்கப்பட்டது. தற்போது நடைபெற்ற சித்திரைத் திருவிழாவில்,
தேனூர் கிராமத்தினருக்கு உரிய மரியாதை தரப்படவில்லை.
இதனைக் கண்டித்து, சமயநல்லூரில் அரசு பள்ளி எதிரே தேனூர் கிராமத்தினர் மற்றும் அரசியல் சமூக அமைப்புகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர். இந்து சமய அறநிலைய துறைக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இனிவரும் காலங்களில், இது போன்று தவறுகள் நடைபெறா வண்ணம் தேனூர் கிராமத்தினருக்கு உரிய மரியாதை தரப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.