பக்தி எத்தகையதாக இருக்க வேண்டும்? ஆச்சார்யாள் அருளுரை!

ஆன்மிக கட்டுரைகள்

75" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeaae0ae95e0af8de0aea4e0aebf-e0ae8ee0aea4e0af8de0aea4e0ae95e0af88e0aeafe0aea4e0aebee0ae95-e0ae87e0aeb0e0af81e0ae95e0af8de0ae95-1.jpg" alt="sringeri-sri-chandrasekara-bharathi-mahaswamigal1" class="wp-image-175207" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeaae0ae95e0af8de0aea4e0aebf-e0ae8ee0aea4e0af8de0aea4e0ae95e0af88e0aeafe0aea4e0aebee0ae95-e0ae87e0aeb0e0af81e0ae95e0af8de0ae95-2.jpg 1024w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeaae0ae95e0af8de0aea4e0aebf-e0ae8ee0aea4e0af8de0aea4e0ae95e0af88e0aeafe0aea4e0aebee0ae95-e0ae87e0aeb0e0af81e0ae95e0af8de0ae95-3.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeaae0ae95e0af8de0aea4e0aebf-e0ae8ee0aea4e0af8de0aea4e0ae95e0af88e0aeafe0aea4e0aebee0ae95-e0ae87e0aeb0e0af81e0ae95e0af8de0ae95-4.jpg 768w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeaae0ae95e0af8de0aea4e0aebf-e0ae8ee0aea4e0af8de0aea4e0ae95e0af88e0aeafe0aea4e0aebee0ae95-e0ae87e0aeb0e0af81e0ae95e0af8de0ae95-5.jpg 150w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeaae0ae95e0af8de0aea4e0aebf-e0ae8ee0aea4e0af8de0aea4e0ae95e0af88e0aeafe0aea4e0aebee0ae95-e0ae87e0aeb0e0af81e0ae95e0af8de0ae95-6.jpg 696w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeaae0ae95e0af8de0aea4e0aebf-e0ae8ee0aea4e0af8de0aea4e0ae95e0af88e0aeafe0aea4e0aebee0ae95-e0ae87e0aeb0e0af81e0ae95e0af8de0ae95-7.jpg 1068w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0aeaae0ae95e0af8de0aea4e0aebf-e0ae8ee0aea4e0af8de0aea4e0ae95e0af88e0aeafe0aea4e0aebee0ae95-e0ae87e0aeb0e0af81e0ae95e0af8de0ae95.jpg 1200w" sizes="(max-width: 696px) 100vw, 696px" title="பக்தி எத்தகையதாக இருக்க வேண்டும்? ஆச்சார்யாள் அருளுரை! 1" data-recalc-dims="1">
sringeri-sri-chandrasekara-bharathi-mahaswamigal1

தாமஸபக்தி, ராஜஸபக்தி, ஸாத்விகபக்தி என்று, பக்தி 3 விதம். பகவான் ஒருவரிருக்கிறார் என்று நம்பி, அவரிடம் தனி சத்துருக்கள் கெடுதலடையவேண்டுமென்று தேங்காய் உடைத்து பிரார்த்திப்பது தாமஸபக்தி. அது நல்லதல்ல. சத்துருவுக்கும் நல்லதல்ல.

புத்தி உண்டாகவேண்டுமென்று பிரார்த்தித்துக் கொள்ளட்டுமே! சத்துருவுக்கும் நல்ல புத்தி வந்தால் அவன் தனக்கு மித்திரனாகி ஸஹாயமுஞ்செய்வானே அவன் தனக்கு அனுகூலமாய் இருந்தால் போதுமல்லவா அவன் கெடவேண்டுமென்று நினைப்பதால் இவனுக்கு புத்தி கெடுகிறதல்லவா? அதனால் தாமஸ பக்தி அதமம். இகழத்தக்கது. சொந்தப்ரயோஜனத்தையே கருதி பகவானிடம் பக்தி பூண்டிருப்பது ரஜஸபக்தி. அதுதான் காம்யபக்தி காம்யபக்தியில் கஷ்டம் அதிகம். விதிமுறைதவறி உபாஸித்தால் (வழிபட்டால்) உத்தேசித்தபலன் கிடையாது. நிர்ப்பந்தம் மிகுதி. அத்துடன் லோபம் (குறைபாடு) வந்தால் விபரீதபலனும் உண்டாகும். பகவானிடம் பசு வேண்டும், புத்திரர் வேண்டும், தனம் (செல்வம்) வேண்டும் என்று ஸாமானியமான லௌகிகவஸ்துக்களைக் கேட்பது சரியல்ல. ஸ்வர்க்கஸுகம் பெறவேண்டுமென்று ஆசைப்பட்டு. ஜ்யோதிஷ்டோமம் முதலான யாகஞ்செய்து உபாஸிப்பதும் மத்யமபக்தி இந்த பலன்கள் எல்லாம் வந்தாலும் எத்தனை நாளிருக்கும்? இவைகளுக்கு தீர்க்காயுஸ் உண்டா? உடனுக்குடன் அழியக்கூடியதுகள். திரும்பத் திரும்ப ஈசனிடம் இவைகளை கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அவ்விதமே கேட்பதாக வைத்துக்கொள்வோம். நமக்கு எவ்வளவு பொருள்கள் தேவையென்பதை நாம் கணக்காக அறிவோமா! நமக்கு வரக்கூடிய விபத்துக்களுக்குத்தான் ஒரு கணக்குண்டா? எதெதுகள் வேண்டுமென்று கேட்டுக்கொள்வது?

ஆதலால் நாம் பகவானிடம், கெட்டது நீங்கி, நல்லதுகளை யெல்லாம் பெற்றுக் கொள்வதற்கு வேறொரு வழியிருப்பதை கவனிக்க வேண்டும். அதுதான் ஸாத்விக பக்தி மார்க்கம். ஸாத்விக பக்தியினால் பகவான் ஸர்வமும் அநுக்ரஹஞ் செய்கிறார். ராஜாவினிடம் ஒவ்வொரு பொருளைக் கேட்டுக் கொள்வதைப் பார்க்கிலும் – ஒரு சம்பளத்தொகைக்காக வேலை செய்வதைப்பார்க்கிலும் – அவரது தயவுமட்டும் கிடைக்கும் விதமாய் ஸேவிப்பதே நல்லது. ஸகல லாபமும் ஆகும்.

சம்பளத்திற்காக ஸேவிப்பவன் ஒரு நாள் சிறிது தவறினும் அபராதமுண்டு. அதுபோல் முன் தெரிவித்த ராஜஸபக்தியில் ஈசுவர அபராதமுமுண்டு. இங்கு ராஜாவின் அநுக்ரஹத்திற்காக மாத்திரம் வேலை செய்வோனுக்கு எவ்விதத் தடையும் ஸங்கடமுமில்லாததுபோல, நிஷ்காமமாய் (பிரயோஜனத்தில் ஆஸ்தையில்லாமல்) பகவானை வழிபடுவோர்களுக்கு ஸகல ஸங்கடமும் உண்டாகாது, விரும்பிய காரியங்களெல்லாம் எளிதில் கைகூடும். அரசனிடம் எவ்விதப் பிரதிப்பிரயோஜனத்தையும் கேளாமல் தினந்தோறும் அரசனிடம் சென்று அவருக்கு ப்ரீதிகரமாக நடந்து வருகின்ற மனிதன் ஒரு நாள் எக்காரணத்தாலேனும் அரசனிடம் பேசாதிருப்பின் அரசன் உடனே தனது ஆளை அனுப்பி, தன்னுடைய பிரியன் என்ன காரணத்தால் தன்னிடம் வரக்கூடவில்லையென்பதை விசாரிக்கச் செய்கிறார். அவனுக்கு சரீரத்தில் நோயுண்டானால் தனது டாக்டர்களை அனுப்பி, சௌக்கியமுண்டாக்கச் செய்கிறார். அதுபோல் ஈசனிடம் நாம் நேசமாய் – ஸாத்விகபக்தியில் பழகி – நடந்துகொண்டால் அவர் நம்முடைய ஆசைகளையும் பூர்த்தி செய்வார். நாம் வேண்டாமென்றாலும் நமது நன்மையிலேயே அவருடைய பார்வையிருக்கும்.

அநந்யாச்சிந்தயந்தோ மாம்
யே ஜநா: பர்யுபாஸதே தேஷாம் நித்யாபியுக்தாநாம்
யோகக்ஷேமம் வஹாம்யஹம் |

என்பது பகவான் கீதையில் தெரிவித்த வாக்கு. “பிறசிந்தனைகளை விட்டு என்னிடமே மனம் செலுத்தியவர்களாய் எவர்கள் என்னை தினந்தோறும் உபாஸிக்கின்றார்களோ அவர்களின் நன்மைகளை நான் பாதுகாக்கின்றேன்” என்பது அதன் அர்த்தம். உலகத்தில் ஸாமானியனான ஒரு ராஜா தன்னிடம் ஸேவித்து வருகிற ஒரு மனிதனுக்கு தினம் படியளக்கிறான்; அவனது குடும்பத்தில் நடக்கின்ற கல்யாணம் முதலியவைகளுக்கு வேண்டிய பொருளுதவி செய்கின்றான். எல்லாவித ஆதரவும் செய்கின்றாள். ஸர்வேசுவரனிடம் ஸேலிப்பவனுக்கோ எவை தான் கிடைக்கமாட்டா? ஆதலால் ஸர்வேசுவரனிடத்தில் எவ் விதப்பற்றுதலும் இல்லாமல் – நிஷ்காமபக்தி செய்வதே உத்தம் பக்தியாகும். இதற்குத் தாழ்ந்ததான ராஜஸபக்திக்கும் இதற்கு முள்ள வித்தியாஸத்தை வேறொரு உதாரணத்தால் விளக்குகிறோம். உலகத்தில் ஸந்தானத்தை விரும்பி ஸ்திரீகள் அரசமரத்தைப் பிரதக்ஷிணஞ்செய்தால் அபீஷ்டஸித்தி உண்டாகும்!”” என்ற பிரயோஜன வாக்கை இவர்கள் மனசில் நினைத்துக் கொண்டு, ஒவ்வொரு பிரதக்ஷிணத்திலும் வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டால் அப்பொழுதே ஸந்தானம் கிடைக்குமா? ஸத்கர்மங்களை ஸமாதானத்தோடு செய்ய வேண்டும் என்ற விஷயம் ராஜஸபக்தியுள்ளவர்களுக்குப் புலப்படாது. ராஜஸபக்தி உள்ளவர்கள் தாங்கள் நினைத்த பலன் கிடைக்கவில்லையென்று நினைத்து அடிக்கடி அச்ரத்தையோடு நின்றுவிடுவார்கள். சாஸ்திரங்களில் சொன்னக் கிரமமாக பொறுமையோடு ஸத்காரியங்களை அனுஷ்டிக்க மாட்டார்கள். உபதேசம் பெற்ற மந்திரங்களை ஒருமைப்பட்ட மனஸோடு ஜபிக்கமாட்டார்கள். உபதேசம் பெற்று எட்டு நாளாயிற்றே! இன்னும் பலிக்கவில்லையே, என்று நினைப் பார்கள்! ஜபிக்கும்பொழுது மனம் எங்கேயோ போயிருக்கும். ஸித்திவருவதெப்படி? மந்திரம் பலிக்கவில்லை என்று மாத்திரம் நினைத்து வெறுப்படைவார்கள்.

வ்யக்ரசித்தேந யஜ்ஜப்தம் தஜ்ஜபம் நிஷ்பலம் பவேத்

“அவஸரமாக – பரபரப்புடன் ஜபிப்பது ஸித்திதராது வீணாகும்” என்பது சாஸ்திரவிதி. இதை ராஜஸபக்தர்கள் கவனித்தால் ஸித்திதராத குற்றம் சாஸ்திரத்தைச் சேர்ந்ததல்ல என்று தெரியும். ஸாத்விக பக்தியில் இவ்விதம் உழைப்பு வீணாகப்போவதேயில்லை. அங்கு எல்லாம் அன்போடு செய்யப்படுகிறது. ஈசனிடம் ஒன்றையும் கேளாமல் அநுக்ரஹம் மாத்திரம் போதும் என்று கேட்டுக் கொள்ளுகிற ஸாத்லிக பக்தனுடைய கோரிக்கை அதிபுத்திசாலித்தனமானது! எல்லாம் அதில் அடங்கும். ப்ரஹ்லாதனுக்கு முன் ஸ்ரீ ந்ருஸிம்மஸ்வாமி ப்ரஸந்நராகி, “உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்ட பொழுது, இந்த மூன்று லோகத்தையும் ப்ரஹ்லாதன் கேட்டிருக்கலாம். அது ஒன்றையும் அவர் கேட்கவில்லை. “ஜகந்நாத! நான் எவ்வளவு ஜென்மங்களை அடைந்தாலும் உமது சரணார விந்தங்களில் அசையாத பக்தி ஒன்றையே வேண்டுகிறேன்’” என்றார். மெய்யன்பரின் மனோநிலை இவ்விதமிருக்கும். தந்தருள

அமிதமுதம்ருதம்… மம – பரிபாலய பக்திதேனுமேகாம்

என்ற சிவானந்தலஹரி சுலோகத்தில் ஸ்ரீ சங்கரபகவத்பாதாள் பக்தி என்னும் பசுவைத் தமக்குக் கொடுக்கவேண்டுமென்று ஈசனிடம் துதித்து வேண்டுகிறார்கள். யாருக்காக? நமக்காக!

நம்முடைய வீட்டில் கறக்கின்ற பசு வேளைக்கு ஒரு படி இரண்டு படி கறக்கும். அதுவும் குறித்தகாலத்தில் மட்டும் தான் கிடைக்கும். அந்த வீட்டுப்பசு கறப்பது பால்தான் ஸந்தோஷத்தையல்ல!

இந்த ‘பக்தி’ என்னும் பசுவானது அளவற்ற ஸந்தோஷாம்ருதத்தைக் கறப்பது. வீட்டுப்பசுவேண்டுமானால், முப்பது ரூபாய் கொடுத்தால் கிடைக்கும். இந்த ‘பக்தி’ என்னும் பசு கறக்க வேண்டுமானால், அநேக ஜென்மங்களில் செய்த புண்ணிய விசேஷபாகங்களாகிய கன்றுகளாலேயே (புண்ணி யாத்மாக்களாலேயே) கறக்கமுடியும்! பக்தி புண்ணியாத்மாக்களுக்குத்தான் கிடைக்கும்.

பக்தி எத்தகையதாக இருக்க வேண்டும்? ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply