682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

விக்கிரமங்கலம் அருள்மிகு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா பால்குடம் அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன்
மதுரை மாவட்டம் விக்கிரமங்கலம் கிராமம் இந்து நாடார் உறவின் முறைக்கு சொந்தமான அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோவில் வைகாசி பொங்கல் உற்சவ விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. சக்தி கரகம் எடுத்து பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
தொடர்ந்து நந்தவனத்தில் இருந்து பக்தர்கள் பால்குடம் அக்னி சட்டி எடுத்து முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். தீபாராதனை காட்டப்பட்டு பக்தர்களுக்கு அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் நாடார் மகாஜன மாநில தலைவர் கரிக்கோல்ராஜ் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சாமி தரிசனம் செய்தார். ஏற்பாடுகளை விக்கிரமங்கலம் இந்து நாடார் உறவின்முறை பரிபாலன சங்க நிர்வாகிகள் தலைவர் ராஜேந்திரன், செயல் தலைவர் வையாபுரி, பொருளாளர் ராஜபாண்டியன், செயலாளர் சௌந்தர பாண்டி ,துணைச் செயலாளர் மனோகரன், பூசாரிகள் மோகன், சிவா ,பழனிவேல், பாலமுருகன் மற்றும் பலர் செய்திருந்தனர். விக்கிரமங்கலம் ஊராட்சி சார்பில் குடிநீர் சுகாதார வசதிகள் செய்யப்பட்டது காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருந்தனர்
லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு பூஜை
மதுரை அண்ணாநகர், வைகை காலனியில் உள்ள வைகை விநாயகர் ஆலயத்தில் லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இக் கோயிலில், மாதந்தோறும் திருவோணம் நட்சத்திரத்தன்று, லட்சுமி ஹயக்கீரிவருக்கு,சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெறுகிறது.
இன்று,திருவோணம் நட்சத்திரத்தன்று, லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது. கோயில் சார்பில், பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் முத்துக்குமார், மணி மாறன் மற்றும் ஆன்மீக பெண்கள் குழுவினர் செய்து இருந்தனர்.
இதேபோல் தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, இக் கோயிலில் உள்ள வராஹி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சணைகள் நடைபெற்றது. மதுரை தாசில்தார் நகர் சௌபாக்ய விநாயகர் ஆலயம், மதுரை யாணைக்குழாய் முத்து மாரியம்மன் ஆலயத்தில், வராஹி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.
பூஜைகளை, மணிகண்டன் பட்டர் செய்தார். இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகி முருகன் மற்றும் ஆலய பரிபாலன சபை நிர்வாகிகள் செய்தனர்.