அறப்பளீஸ்வர சதகம்: பாழாகும் விஷயங்கள்!

ஆன்மிக கட்டுரைகள் கட்டுரைகள்
arapaliswarar - Dhinasari Tamil

ஒன்றின் இல்லாமையாற் பாழ்படல்

யானைமுகத்தவனையும் முருகனையும் அளித்தருளிய‌ தலைவனே!, அருமை தேவனே!, தாம்பூலம் தரித்துக் கொள்ளாமல் இருப்பதே முழுமதியென விளங்கு முகத்திற்குப் பாழாகும், நல்லோர் வாழாததே மிகுதியான மக்கள் கூடிவாழும் பெரிய நகர்க்குப் பாழாகும், உயர்ந்த பண்பு இல்லாத அரசர்கள் வந்து ஆட்சிபுரிவது பெரிய நாட்டுக்குப் பாழாகும், சிறந்த நன்மகன் இல்லாமையே அழகிய தாம்பூல தாரணம் இலாததே வருபூர்ண
சந்த்ரன்நிகர் முகசூ னியம்!
சற்சனர் இலாததே வெகுசனம் சேர்ந்துவாழ்
தரும்பெரிய நகர்சூ னியம்!
மேம்பா டிலாதமன் னவர்கள் வந்தாள்வதே
மிக்கதே சச்சூ னியம்!
மிக்கசற் புத்திரன் இலாததே நலமான
வீறுசேர் கிருகசூ னியம்!
சோம்பாத தலைவரில் லாததே வளமுடன்
சொல்லுயர் சபாசூ னியம்!
தொல்லுலகில் அனைவர்க்கும் மாநிதியம் இல்லதே
சுத்தசூ னியமென் பர்காண்!
ஆம்பல்வத னத்தனைக் குகனையீன் றருள்செய்த
அத்தனே! அருமை மதவேள்
அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்
அறப்பளீ சுரதே வனே!

யானைமுகத்தவனையும் முருகனையும் அளித்தருளிய‌ தலைவனே!, அருமை தேவனே!, தாம்பூலம் தரித்துக் கொள்ளாமல் இருப்பதே முழுமதியென விளங்கு முகத்திற்குப் பாழாகும், நல்லோர் வாழாததே மிகுதியான மக்கள் கூடிவாழும் பெரிய நகர்க்குப் பாழாகும், உயர்ந்த பண்பு இல்லாத அரசர்கள் வந்து ஆட்சிபுரிவது பெரிய நாட்டுக்குப் பாழாகும், சிறந்த நன்மகன் இல்லாமையே அழகிய பெருமைபெற்ற வீட்டுக்குப் பாழாகும், ஊக்கமுடைய தலைவர்கள்
இல்லாமையே செழிப்புடன் செப்பப்படுகின்ற அவைக்குப் பாழாகும்,
பழமையான உலகத்தில் யாவருக்கும் பெருஞ்செல்வம் இல்லாமையே
பெரும் பாழாகும் என்றும் (அறிஞர்) கூறுவர்.

(க-து.) எவற்றிற்கும் அவற்றைச் சிறப்பிக்க ஒரு பொருள் வேண்டும்.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply