சபரிமலை மண்டல பூஜை நடை இன்று திறப்பு: பஸ் சேவையில் கோட்டை விட்ட தமிழக அரசு!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

sabarimala iyappan sannidhi opened

இந்த ஆண்டுக்கான மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் திருநடை வெள்ளிக்கிழமை நவம்பர்15-ந்தேதி திறக்கப்படுகிறது. முதல் நாளிலேயே ஐயனை தரிசனம் செய்ய பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பம்பையில் முகாமிட்டுள்ளனர்.

நாளை சனிக்கிழமை நவ 16ல் மண்டல பூஜை வழிபாடுகள் விமர்சையாக துவங்கி நடைபெறும். டிசம்பர் 26-ந்தேதி மண்டல பூஜையும், ஜனவரி 14-ந்தேதி மகரவிளக்கு பூஜை யும் நடைபெறுகிறது. இதற்காக மேற்கொள்ள வேண்டிய பணிகளை திருவாங்கூர் தேவசம்போர்டு கேரள அரசு விரிவாக செய்துள்ளது.

கார்த்திகை முதல் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ந்து நடைபெறும் பூஜை சபரிமலையில் மண்டல காலம் என்று அழைக்கப்படுகிறது.

இந்த பூஜைகளின் நிறைவாக 41 வது நாள் மண்டல பூஜை நடைபெறும், இதற்காக சபரிமலை நடை நாளை மாலை 5:00 மணிக்கு திறக்கப்படும். மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறந்து விளக்கேற்றி கோவிலை வலம் வந்து 18 படிகள் வழியாக கீழே இறங்கி ஆழிகுண்டத்தில் நெருப்பு வளர்ப்பார்.

தொடர்ந்து அங்கு காத்திருக்கும் அடுத்த ஒரு ஆண்டு காலத்திற்கான புதிய மேல் சாந்திகள் சபரிமலை – அருண்குமார் நம்பூதிரி, மாளிகைப்புறம் – வாசுதேவன் நம்பூதிரி ஆகியோரை கை பிடித்து அழைத்து சன்னிதி முன் அழைத்து வருவார். தொடர்ந்து தந்திரி கண்டரரு ராஜீவரரு புதிய மேல் சாந்திகளுக்கு அபிஷேகம் நடத்துவார்.

வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறாது. இரவு 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். நவ.16 அதிகாலை 3:00 மணிக்கு நடை திறந்ததும் தந்திரி அய்யப்பன் விக்ரகத்தில் அபிஷேகம் நடத்தி, நெய்யபிஷேகத்தை தொடங்கி வைப்பார். தொடர்ந்து பூஜைகள் தொடங்கும்.

மண்டல சீசனில் தினமும் ஆன்லைன் முன்பதிவு மூலம் 70 ஆயிரம் பேரும், ஸ்பாட் புக்கிங் மூலம் 10 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். ஸ்பாட் புக்கிங் கவுண்டர் பம்பையில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு விரைவுப் பேருந்துகள் இயங்குமா?!

சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் நலன் கருதி தென்காசி செங்கோட்டை வழி கேரளாவில் முக்கிய நகரங்களுக்கு இயக்கப்பட்ட தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களை மீண்டும் இயக்க பக்தர்கள் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் பத்தனம் திட்ட மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் செல்வதற்கு தென்காசி மாவட்டம் செங்கோட்டை புளியரை வழி கேரளா செல்லும் தேசிய நெடுஞ்சாலை முக்கிய வழித்தடமாக உள்ளது.

இந்த வழித்தடத்தில் தான் முன்பு ஏராளமான பக்தர்கள் வேன் பஸ்களில் சபரிமலை சென்று வந்தனர் . சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக மதுரை தென்காசியில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் பம்பைக்கு மண்டல மகர விளக்கு காலங்களில் நேரடி சிறப்பு பஸ்களை செங்கோட்டை புளியரை புனலூர் பத்தனம்திட்டா வழியாக இயக்கியது.

கொரோனா காலத்திற்கு பின்பு இந்த சிறப்பு பஸ்கள் தென்காசியில் இருந்து இயக்கப்படுவதில்லை சென்னை மதுரை பாண்டிச்சேரி போன்ற முக்கிய நகரங்களில் இருந்து குமுளி வழியாகவே பஸ்கள் இயக்கப்படுகிறது.

மதுரை தென்காசி நகரங்களிலிருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக செங்கோட்டை புனலூர் பத்தாம் திட்ட வழியாக பம்பைக்கு இயக்கப்பட்ட சபரிமலை சீசன் களச் சிறப்பு பஸ்கள் தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம் இயக்குவது இல்லை கேரளா அரசு போக்குவரத்துக் கழகம் மட்டுமே பம்பையில் இருந்து தென்காசிக்கு சிறப்பு பஸ்களை இயக்கி வருகிறது.

தற்போது இந்த வழித்தடத்தில் செங்கோட்டையில் இருந்து அல்லது தென்காசியில் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் வசதிக்காக இந்த ஆண்டு சிறப்பு ரயில் இயக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர்.

ஆனால் இதுவரை தென்னக ரயில்வே ரயில்வே வாரியம் சபரிமலை செல்லும் பக்தர்களுக்காக சிறப்பு ரயில்களை சேலம் பாலக்காடு வழியாகவே கோட்டையம் சங்கனூருக்கு இயக்குகிறது.

இந்த வழித்தடத்தில் பெங்களூரில் இருந்து மற்றும் சென்னையில் இருந்து செங்கோட்டை புனலூர் வழியாக சிறப்பு ரயில்கள் இயக்க ப்படும் என பல்வேறு தரப்பினரும் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் இதுவரை அதற்கான அறிவிப்புகள் ஏதும் இல்லை. தற்போது இந்த வழித்தடத்தில் கேரளாவுக்கு ரெகுலர் சர்வீஸ் களாக இயக்கி வந்த அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்களும் தற்போது இயங்குவதில்லை

சென்னையில் இருந்து மதுரை தென்காசி செங்கோட்டை புனலூர் வழியாக பத்தனம்திட்டாவிற்கு தினசரி விரைவு போக்குவரத்து கழகம் பஸ் சொகுசு சூப்பர் பஸ்சாக இயக்கப்பட்டது. இது போல் கொல்லும் புனலூர் செங்கோட்டை வழி சென்னைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ் இயங்கி வந்தது.

மேலும் கொட்டாரக்கராவில் இருந்து தென்காசி வழியாக திருச்சிக்கு தினசரி இரண்டு பஸ்களும் கொட்டாரக்கராவில் இருந்து சென்னைக்கு ஒரு அரசு விரைவு பஸ் கொல்லத்திலிருந்து ஒரு அரசு விரைவு பஸ்ஸும் சென்னைக்கு இயக்கப்பட்டது.

மேலும் தூத்துக்குடியில் இருந்து தென்காசி செங்கோட்டை வழியாக குருவாகி இருக்கும் ஒரு அரசு விரைவு போக்குவரத்து கழக சொகுசுபஸ் இயக்கப்பட்டது இந்த பஸ்கள் அனைத்துமே தற்போது இயங்குவதில்லை. இந்த பஸ்களை மீண்டும் இயக்கி சபரிமலை செல்லும் பயணிகள் வசதிக்காக கூடுதல் வசதி ஏற்படுத்தி தர தமிழக அரசு விரைவு போக்குவரத்து கழகம் முன்வர வேண்டும் என பயணிகள் பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் செங்கோட்டை கேரளாவின் நுழைவு வாயில் பகுதியாக உள்ளது. செங்கோட்டையில் இருந்து பண்பொழி அச்சன்கோவில் வழியாக பத்தணாபுரம் சென்று பத்தனம்திட்டா வழி பம்பைக்கு எளிதில் சென்று விடலாம்.

இதுபோல் செங்கோட்டையில் இருந்து புனலூர் வழியாக பத்தனம்திட்டா வழி பம்பைக்கு செல்வதற்கு நல்ல தேசிய நெடுஞ்சாலை வசதி உள்ளது. எனவே ஐயப்ப பக்தர்கள் செங்கோட்டைக்கு அதிகளவில் வருகை தந்து இங்குள்ள ஐயப்பன் படை வீடுகளைக் காணச் செல்கின்றனர்.

செங்கோட்டையிலிருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் அச்சன்கோவில், செங்கோட்டையிலிருந்து புனலூர் செல்லும் வழியில் 15 கிலோ மீட்டர் தொலைவில் ஆரியங்காவு, சுமார் 25 கிலோ மீட்டர் தொலைவில் குளத்துப்புழா ஐயப்பன் கோவில் ஆகிய முக்கிய கோவில்கள் உள்ளன.

இந்தக் கோவில்கள் ஐயப்பனின் படைவீடு கோயில்களாக உள்ளன. இதைக் காண ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். பக்தர்களின் வசதிக்காக கோயில் செல்லும் பக்தர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க ஐயப்ப பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழக அரசு போக்குவரத்துக் கழகம் செங்கோட்டையிலிருந்து அச்சன்கோவிலுக்கு ஒரு அரசு பஸ்சை தினமும் இரண்டு முறை இயக்கி வந்தது. இந்த பஸ் தற்போது சீராக இயங்குவதில்லை. சீசன் காலத்தில் இந்த பசை வசூல் ரீதியாகப் பார்க்காமல் பக்தர்களின் வசதிக்காக மீண்டும் இயக்க பயணிகள் பக்தர்கள் வலியுறுத்துகின்றனர்!

author avatar
Media News Reporter, Rajapalayam

Leave a Reply