குருமகா சன்னிதானம் குருந்தமூலம் வழிபாடு

சிவ ஆலயம்

ஆவுடையார்கோவில்

ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவிலில் குருமகாசந்நிதானம் தனுர் மாத தரிசனம் செய்தார்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோவிலில் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமான ஆத்மநாத சுவாமி கோவில் உள்ளது

இக்கோவில் பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாசகம் பிறந்த கோவிலாகும்

இக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தனுர் மாத பூஜையின்போது குருமகாசன்னிதானம் கலந்து கொண்டு வழிபாடு செய்வது வழக்கம் அதன்படி திருவாவடுதுறை 24 ஆவது குருமகாசந்நிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் கோயிலுக்கு வந்தார் அவரை பாலசுப்பிரமணி நம்பியார் மாணிக்க குழுக்கள் பப்பு சாஸ்திரிகள் பூரணகும்பம் கொடுத்து வரவேற்றனர்

அதனைத் தொடர்ந்து குருமகாசன்னிதானம் மாணிக்கவாசக சுவாமிகள் ஆத்மநாதர் வீரபத்திரர் குருந்தமூலம் ஆகியவற்றினை தரிசனம் செய்தார்கள்

தொடர்ந்து பாலசுப்பிரமணிய நம்பியார் பிரசாதம் வழங்கினார்

இந்த வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர் குருமகாசந்நிதானம் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார் இந்த வழிபாட்டில் மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மணியன் ராமன் உட்பட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply