குதம்பை சித்தர் வழிபாடு

சிவ ஆலயம்

மயிலாடுதுறை குதம்பைச் சித்தருக்கு
கார்த்திக்கை விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு

மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சார்பில் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோயிலில் ஜீவசமாதி கொண்டு அருளும் குதம்பை சித்தருக்கு திருவாவடுதுறை ஆதீனம் 24 ஆவது குருமகாசந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் ஆணைப்படி குதம்பை சித்தருக்கு கார்த்திக்கை விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. குதம்பைச் சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார் விழாவில் மயூரநாதர் திருக்கோயிலில் கண்காணிப்பாளர் குருமூர்த்தி மற்றும் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அபிஷேக அலங்காரத்தை ராஜூ குருக்கள் செய்திருந்தார். விழாவிற்கான ஏற்பாடுகளை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் செய்திருந்தார்.

பேரவையின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் டாக்டர் ராம சேயோன் செய்திருந்தார்.

Leave a Reply