ரிக், யஜுர், சாம, அதர்வணம் என்ற நான்கு பாகங்களாகப் பிரித்து ஸýமந்து, பைலர், ஜைமினி, வைசம்பாயனர் ஆகிய நான்கு ரிஷிகளுக்கும் ஒவ்வொரு வேதத்தை உபதேசம் செய்தார். அவர்கள் மூலமும், அவர்களுக்குப் பிறகு வந்த ரிஷிகள் மூலமும் அந்த சப்த ரூபமான வேதமந்திரங்கள் இன்றளவும் நம்மிடையே நிலைபெற்றுள்ளன என்றால் அதற்கு வேதவியாசர்தான் காரணம். எல்லோரின் வாழ்க்கைக்கும் பயன்படும் வகையில் மகாபாரதம், பிரம்மசூத்ரம் ஆகியவற்றையும்
அருளினார்.
தொன்மையான நூல்களுள் ஒரு சிலவேனும் இன்று நம்மிடையே உள்ளன என்றால் அதற்கும் காரணம் மகரிஷி வியாசரே ஆவார். பகவான் விஷ்ணுவே வியாஸர் உருவில் அவதரித்ததாகக் கருதப்படுகிறது. “முனிவர்களுள் வியாசராக இருக்கிறேன்’ என்று கண்ணனே பகவத் கீதையில் கூறியுள்ளார் என்றால் வியாசரின் பெருமையை என்னவென்பது?
இவ்வாறு அஞ்ஞானத்தை அகற்றி ஞான ஒளியைத் தந்த குருவிற்கு வந்தனமும், நன்றியும் செலுத்தும் விதத்தில் குரு பூர்ணிமா அமைந்துள்ளது. படிப்பையோ, மந்திரத்தையோ, ஞான மார்க்கத்தையோ கற்பித்த குருமார்களுக்கு நன்றி செலுத்துவதும் வியாச பூஜையின் சிறப்பு அம்சமாகும்.
தகவல்: வெள்ளிமணி