அகத்தியர் அருளிய ஹரிகுண மாலையில் – ஹரிநாமத்தின் சிறப்பு!

ஸ்தோத்திரங்கள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

ஹரிநாமம்

ஆதிஅயனொடு தேவர்முறையிட ஆசிதருவது ஹரிநாமம்‌
ஆவிபிரிவுறும்‌ வேளைவிரைவினில்‌ ஆளவருவது ஹரிநாமம்‌
ஒதும்‌அடியவர்‌ நாவில்‌அமுதென ஊறி நிறைவது ஹரிநாமம்
ஒலமிடு கஜ ராஜன்‌ விடுபட ஓடி௮ருள்வது ஹரிநாமம்

வேதமுடியிலும்‌ வேள்விமுடிவிலும்‌ மேவிஉறைவது ஹரிநாமம்‌
வீசும்‌ அலைகடல்‌ சேஷன்நிழல்செய நீடுதுயில்வது ஹரிநாமம்‌
நாதஜெயஜெகந் நாதநமவென நாளும் அவனடி,பணிவோமே
நாமபஜனையில்‌ நாமமகிமையால்‌ நாதனவனருள்‌ பெறுவோமே !
பூதகண பரி வாரபரசிவ பூஜைபெறுவது ஹரிநாமம்‌
பூமிபுவனமும்‌ ஏகபதமள வாகவளர்வது ஹரிநாமம்‌
தாதைதொடுமிட மேதுமவனுளன்‌ தேவனெனுமக னுரைபோலே
தாகநர ம்ருக கோர வடிவொடு தூணிலெழுவது ஹரிநாமம்‌

காதலொடு கவி பாடுமடியவர்‌ காணவருவது ஹரிநாமம்‌
காலநிலைகரு தாது துதிசெயத்‌ தாவி வருவது ஹரிநாமம்
ஏதுவிலகினும்‌ ஏதுதொடரினும்‌ ஈசனவனருள்‌ நினைவொன்றே
ஏறியநுபவமீறி ௮னைவரும்‌ ஏகபஜனையில்‌ மகிழ்வோமே !

நாராயண விபூதி.

உடலென்ற போர்வைக்குள்‌ ஒளிகின்ற நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌
அடர் ஐந்து கோட்டைக்குள்‌ அரசாளும்‌ நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌

மனமென்ற கடல் மீது வளர்கின்ற நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌
அனல் நின்ற பொருள்‌ சேஷ சயனங்கொள்‌ நானார்
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌

தொழில் யாவுமே செய்து துயில்‌கின்ற நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌
அழியாத தனிமூல வடிவான நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌

உலகெங்கும்‌ உயிரெங்கும்‌ உறைகின்ற நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌
பல வேஷமும்‌ பூண்டு பயில்கின்ற நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌

முளையாத முடியாத முதலான நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌
இளையாத தளராத இயல்பான நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌

வாடாது குவியாது மகிழ்கின்ற நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌
கூடாது குறையாது நிறைவான நானார்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌

பசி தாகம்‌ அறியாத பரமாத்மனே நான்‌
பகலற்ற இரவற்ற பரிபூர்ணமே நான்‌
அஜபாவில்‌ நடமாடும்‌ அருளின்பமே நான்‌
ஆனந்த நிலைகாணும்‌ அனுபூதியே நான்‌

தேனாய்‌ இனிக்கின்‌ற சிவசக்தியே நான்
தேகத்தில்‌ விளையாடும்‌ ஜீவாத்மனே நான்‌
நானாவிதம்‌ தோன்றும்‌ ஞானாத்மனே நான்‌
நர ரூபமாய் வந்த நாராயணன்‌ நான்‌

ஓம்நமோ பகவதே நாராயணாய
உலகெங்கும்‌ நினதாடல்‌ உளதென்று பணிவேன்‌
ஓம்நமோ பகவதே நாராயணாய
உனையன்றி இலையென்ற நிலைகண்டு தொழுவேன்‌

அதிர்கின்ற திரையாழி அபிஷேக நீராம்‌
ஆராதனைக் கிங்கு தாரா கணங்கள்‌
கதிரோன்‌ உனக்கேற்ற கற்பூர தீபம்‌
காணும்‌ ப்ரபஞ்சமோ மாயா விநோதம்‌

உதயத்தில்‌ ஒளியாகி உலகம்‌ தரிப்பாய்‌
யுக கால முடிவில்‌ ஒவ்வொன்றும்‌ பிரிப்பாய்‌
இதயத் துனைக்கண்ட பின்பேது மாயம்‌
எப்போதும்‌ நீவந்து செய்வாய்‌ ஸஹாயம்‌

ஓம்‌ நமோ பகவதே நாராயணாய
உயிருக்குள்‌ உயிரான உனதுண்மை கண்டேன்‌
ஓம்‌ நமோ பகவதே நாராயணாய
ஓயாத லீலா விபூதி இது கண்டேன்‌

Leave a Reply