– Advertisement –
– Advertisement –
ஸ்ரீநரசிம்மர்துதி”-பன்னிருதிருநாமங்கள்-தினமும்.
நரஹரியாகத் தோன்றிய நாரணரே, உமது பன்னிரு திருநாமங்களைச் சொல்கிறேன்.
பிரகாச ஒளிபொருந்தியவர் என்பதால் மகாஜ்வாலன்.
சினம் மிக்க சிம்மமாதலால் உக்ரசீயம்.
அச்சமூட்டும் கூரிய பற்களை உடையவர் ஆதலின் வஜ்ர தம்ஷ்ட்ரன்.
மேதாவியாக விளங்குபவன் என்பதால் அதிசதுரன்.
மனிதனும் சிம்மமும் சேர்ந்த திருவடிவானதால் நரஹரி (நரன்-மனிதன், அரி-சிம்மம்).
கச்யபமுனிவரின் மகனான இரண்யனை அழித்ததால் கஸ்பமர்த்தனர்.
அண்டியவரைக் காத்திட அசுரனை அழித்ததால் யதுஹந்தாசர்.
தேவர்தம் குறை தீர்த்ததால் தேவவல்லபர்.
பாலகபக்தன் பிரகலாதனுக்கு அருளியதால் பிரகலாதவரதன்.
எண்ணற்ற திருக்கரங்களை உடையவராதலால் அனந்தஹஸ்தகர் (அனந்த-கணக்கற்ற, ஹஸ்தம்-கை)
பாவங்களைப் போக்குவதில் முதன்மையானவர் என்பதால் மகா ருத்ரர்.
சரியான தருணத்தில் உதவிபுரிபவர் என்பதால் தாருணீ
ஆகிய இந்த பன்னிரு திருநாமங்களை உடையவரே உம்மை மனதாரப் வணங்குகின்றேன்.
மந்திரங்களில் எல்லாம் மேலானதாகவும், அவற்றின் அரசனாக விளங்கும் மகாமந்திரமாகக் கருதப்படும் இந்தப் பன்னிரண்டு திருநாமங்களைச் சொல்லி நரசிம்மரை பூஜிப்பவர்கள் அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு சகல வளமும் நலமும் பெற்று வாழ்ந்து நிறைவில் நற்கதி அடைவர்.
இந்த துதியைச் சொல்வதால் உடல்மெலிவு நோய், தீராப்பணி, தொற்றுநோய், காய்ச்சல்கள் போன்ற வற்றிலிருந்து நிவாரணம் கிடைக்கும். அரசாங்க அனுமதி சார்ந்த முயற்சிகளில் வெற்றி கிட்டும். பெரும் இடர்களில் இருந்தும், நெருப்பு, வெள்ளம், திக்குத் தெரியாத காடு போன்றவற்றிலிருந்தும் மீளமுடியும்.
வழுக்கலும் சறுக்கலுமான மலைகளிலும், கொடிய விலங்குகள் உலவும் காடுகளிலும் உமது துணையால் புலி, திருடர் பயத்திலிருந்து காப்பாற்றப்படுவர். போரிலிருந்தும் மரணத்திலிருந்தும் மீண்டு மேலான சுபமான வாழ்வைப் பெறுவர்.
இந்த பன்னிரு நாமாக்களையும் நூறுமுறை சொல்பவர் சகல தடைகளில் இருந்தும் விடுபடுவர். அவர்களது ஆரோக்கியம் சீராகும். நோய்களிலிருந்தும் மீள்வர். ஆயிரம் முறை ஜபிப்பவர்கள் கோரியதெல்லாம் அடைவர்.
– Advertisement –