இந்த வார ராசி பலன்கள் : 2011 அக்டோபர் 21 முதல் அக்டோபர் 27 வரை

விழாக்கள் விசேஷங்கள்

https://www.dinamani.com/edition/astrology.aspx?starname=libra

துலாம்:

(சித்திரை 3 -ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

சிறப்பான வாரம். சமூகத்தில் உங்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த முன்னேற்றத்தை அடைவீர்கள். சுறுசுறுப்பாலும், விடாமுயற்சியாலும் வெற்றி வாகை சூடுவீர்கள். குடும்பத்தில் பணப்புழக்கம் நன்றாக இருக்கும். சகோதர சகோதரிகளுடன் ஏதோ ஒரு விஷயத்தில் அனாவசியப் பிரச்னை ஏற்பட்டுக்கொண்டே இருக்கும். அதனால் அவர்களுக்கு எந்த விஷயத்திலும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

உத்யோகஸ்தர்களுக்கு வேலைச் சுமை அதிகரிக்கும். செய்கின்ற வேலைகளில் சிறுசிறு குறைகள் உண்டாகும்.

வியாபாரிகளுக்குக் கொள்முதல் வியாபாரம் நல்லபடியாக முடியும். புதிய வாடிக்கையாளர்கள் உங்களைத் தேடி வருவார்கள்.

விவசாயிகள் கையிருப்புப் பொருட்கள் மீது அக்கறை காட்டவும். சந்தையில் போட்டிக்குத் தகுந்தாற்போல் செயல்பட்டால் எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

அரசியல்வாதிகளுக்கு இடையிடையே சிறு பிரச்னைகள் தோன்றி மறையும். கட்சித் தலைமையிடம் மோதல், வாக்குவாதம் போன்றவற்றைத் தவிர்த்து உங்களுக்குத் தேவையானவற்றில் மட்டுமே கவனமாக இருக்கவும்.

கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். எதிர்பார்த்த புகழும், பாராட்டும் கிடைக்க தாமதமாகும்.

பெண்மணிகளுக்கு பண வரவு திருப்திகரமாக இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்குவீர்கள்.

மாணவமணிகள் உள்ளரங்கு விளையாட்டுகளில் அதிக கவனம் செலுத்துவீர்கள். பெற்றோரின் ஆதரவுடன் எண்ணங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.

பரிகாரம்: மஹாலட்சுமியை தீபமேற்றி வழிபடவும்.

அனுகூலமான தினங்கள்: 23,25

சந்திராஷ்டமம்: இல்லை..