400 ஆண்டு பழமையான பசுமலை மந்தையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம்!

ஆன்மிக கட்டுரைகள் செய்திகள்

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

400 ஆண்டுகள் பழமை வாய்ந்த மதுரை பசுமலை  மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

பழமை வாய்ந்த சுமார் 400 ஆண்டுகள் 7 வது  தலைமுறையினரால் வழிபடப்படும் மதுரை பசுமலை அருள் மிகு ஸ்ரீ மந்தையம்மன் திருக்கோவில் 2-வது மகா கும்பாபிஷேகம்  நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி, முன்னதாக ராமேஸ்வரம், கன்னியாகுமரி ,காசி யமுனை, சரஸ்வதி, காவேரி, போன்ற புண்னிய நதிகளின்  தலங்களில் இருந்து புனித நீர் கொண்டு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.

கடந்த 1ம் தேதி காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் முதல் கால யாக பூஜைகள் துவங்கியது.  மாலை 5.30 மணியிலிருந்து இரண்டாம் கால பூகைகள் துவங்கி நடைபெற்றது. மேலும், 3ம் கால  யாக சாலை பூஜைகள் காலை 5 மணிக்கு துவங்கி  பூர்ணாஹுதியுடன் நிறைவு பெற்றது.

 யாக சாலையில பல்வேறு மூலிகை பொருட்களுடன் நடத்தப்பட்டது. வேத விற்பன்னர்கள் வேத மந்திரங்களை ஓதினர். இந்த கும்பா பிஷேக நிகழ்ச்சியின் போது அந்த பகுதி மக்கள் பக்தி பரவசத்துடன் இறைவனை பிரார்த்தினர்.

 கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு , 6 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்த விழா கமிட்டி தலைவர் ரவிச்சந்திரன் கோவிலின் புராதான தொன்மையையும் கோவிலின் மகிமை குறித்தும் செய்தியாளர்களிடம் கூறினார்.

 மந்தையம்மன் கோயில் இத் திருத்தலம் இறைவனின் திருவிளையாடல் புராணத்திலும் இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டார். சுமார் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த திருக்கோவில் இப் பகுதி  சமூகத்தினரின் 7 தலை முறையினரால் வழிபடும் காவல் தெய்வமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.

இதற்கு முன்னர் பழமை வாய்ந்த இத் திருக்கோவில் விழா கமிட்டியினரால் புனரமைக்கப்பட்டு கடந்த 2012-ம் ஆண்டு கால கட்டத்தில் முதல் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

 இத் திருக்கோவில் கும்பாபிஷேகத்திற்கான விரிவான ஏற்பாடுகளை விழா குழு தலைவருமான எம்.பி.ஆர். ரவிச்சந்திரன்,  பாண்டி முருகன் துணை தலைவர் ஜெயராமன் செயலாளர் ஐ.பி.எஸ் பால முருகன் திமுக பிரமுகர் கணேசன்  மாமன்ற உறுப்பினர் எம்.ஜெயராமன் ,  அர்ச்சனா புட் பார்க் மகாலிங்கம் ஆகியோர் செய்திருந்தனர்.

Leave a Reply