
இன்று பிலவ தமிழ்ப் புத்தாண்டு கொண்டாடப் பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, பல்வேறு ஆலயங்களிலும் பஞ்சாங்க படனம் எனப்படும் பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ்ப் புத்தாண்டு பிலவ ஆண்டு (14.4.2021) புதன்கிழமை பிறந்ததை முன்னிட்டு, அருள்மிகு உண்ணாமுலை உடனுறை அண்ணாமலையார் திருக்கோயிலில், சம்பந்த விநாயகர் முன் புதிய பிலவ வருட பஞ்சாங்கம் படைக்கப்பட்டது. பின்னர், பஞ்சாங்க படனம் எனப்படும், பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆலய சிவாச்சாரியார்கள் பஞ்சாங்கம் வாசித்து பூஜை செய்தனர்.
- எஸ்.ஆர்.வீ. பாலாஜி, திருவண்ணாமலை