புத்தாண்டு; அழகர்கோயில் நூபுரகங்கையில் புனித நீராடிய பக்தர்கள்!

செய்திகள்

மதுரை அருகே உள்ளது அழகர்கோவில். தமிழ்ப் புத்தாண்டையொட்டி மலைமேல் உள்ள புனித தீர்த்தமான நூபுர கங்கையில் பக்தர்கள் புனித நீராடி தாங்கள் கொண்டு வந்து இருந்த கேன்களில் புனிதநீரை பிடித்து அங்குள்ள ராக்காயி அம்மனை வழிபாடு செய்தனர்.

தொடர்ந்து வரும் வழியில் முருகனின் ஆறாவது படைவீடு எனும் பழமுதிர்ச்சோலை முருகன் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் காட்சி அளிக்கும் சுப்ரமணியப் பெருமானை பக்தர்கள் வழிபட்டு மகிழ்ந்தனர்.

தொடர்ந்து மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அழகர்கோவிலில் தரிசனம் அளிக்கும் கள்ளழகர் என்ற சுந்தராஜ பெருமானையும் ஸ்ரீ தேவி பூதேவியையும் வணங்கி கல்யாண சுந்தரவள்ளி தயார், சக்கரத்தாழ்வார், யோகநரசிம்மர், ஆண்டாள், மற்றும் காவல் தெய்வமாக விளங்கும் 18ம் படி கருப்பணசாமியை வழிபட்டு பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

கொரோனா கால நெருகடி என்பதால், வழக்கமான பக்தர்கள் கூட்டம் இல்லாமல், குறைவான அளவிலேயே பக்தர்கள் வந்திருந்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Leave a Reply