சபரிமலை ஆடி நிறைப்புத்தரிசி பூஜைக்காக நெல்கதிர்கள் கொண்டு செல்லும் ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள்..

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
– Advertisement –

682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">

Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!

கேரளாவில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் நிறைப்புத்தரிசி பூஜை விழா பிரதான விழாவாக ஆடி மாதத்தில் நடத்தப் படுகிறது.ஆவணி அறுவடை காலம் மலையாளப் புத்தாண்டு திருவோணம் விழாவுக்கு முன்னதாக இந்த பூஜை விழா கேரளா ஜோதிட பண்டிதர்கள் நாள் குறித்து இவ்விழா கொண்டாடப்படுகிறது . இந்த பூஜை கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை குருவாயூர் உட்பட அனைத்து கோயில்களிலும் நடைபெறும்.விளைந்த நெல் கதிர்களை அறுவடை செய்து சுவாமி முன்பு வைத்து பூஜைகள் செய்து பக்தர்களுக்கு இந்த நெற்கதிர் பிரசாதமாக வழங்கப்படுகிறது.

இந்த பூஜைக்காக தமிழகத்தில் ராஜபாளையத்தில் உள்ள ராஜபாளையம் ஐயப்ப‌பக்தர்கள் நண்பர்கள் குழு சார்பில் ஒருங்கிணைப்பாளர் குளோப் நாகராஜன் தலைமையில் நெற்கதிர் கட்டுக்கள் கடந்த 2016முதல் சபரிமலை அச்சன்கோவில் ஆரியங்காவு குளத்துப்புழா பந்தளம் ஐயப்பன் கோயில்களுக்கு வழங்கப்படுகிறது.மேலும் பல பிரபலமான கோயில்களில் வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு நிறைப்புத்தரிசி பூஜை கேரளாவில் ஆக 10ல் அதிகாலை பூஜை வழிபாடு நடைபெறுகிறது.இதற்காக ராஜபாளையம் பகுதியில் நெல் பயிர் செய்து அறுவடை செய்து நாளை கொண்டு செல்லப்படுகிறது.

இது குறித்து ராஜபாளையம் ஐயப்ப பக்தர்கள் நண்பர்கள் குழு ஒருங்கிணைப்பாளர் குளோப் நாகராஜன் தெரிவித்ததாவது,

கேரளாவில் உள்ள சபரிமலை பந்தளம் அச்சன்கோவில் ஆரியங்காவு உட்பட முக்கிய கோயில்களில் நடைபெறும் நிறைப்புத்தரிசி பூஜைக்காக நாங்கள் நெல் பயிரிட்டு அறுவடை செய்து கடந்த ஏழு ஆண்டுகளாக சபரிமலை மற்றும் ஐயப்பனின் படை வீடு கோவில்களான அச்சன்கோவில் ஆரியங்காவு குளத்துப்புழா பந்தளம் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணன் கோவிலான ஆரம்ப புழா பார்த்தசாரதி கோவில் புனலூர் கிருஷ்ணன் கோயில் உட்பட முக்கிய கோவில்களுக்கு நெற்கதிர்களை பூஜைக்காக வழங்கி வருகிறோம் .

நாட்டில் நல்ல மழை பெய்து பூமி செழித்து நெல் சாகுபடி மற்றும் விவசாயம் செழிக்க இந்த அறுவடை செய்த நற்கதிர்களை பூஜைக்காக கோயில்களில் கொடுத்து பூஜை செய்த நற்கதிர்களை பிரசாதமாக பெற்று விவசாயிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கி ஒரு ஒரு பக்தி நிகழ்வாக செய்துவருகிறோம்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு திருவாங்கூர் தேவசம்போர்டு தலைவராக இருந்த பிரையார் கோபாலகிருஷ்ணன் அவர்கள் கூறியதின் படி இந்த நெற்கதிர்களை பயிரிட்டு முதல் முதலாக அச்சன்கோவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு சபரிமலைக்கு கொண்டு சென்றோம்.

தற்போது இந்த ஆண்டு அச்சன்கோவில் ஆரியங்காவு குளத்துப்புழா புனலூர் ஸ்ரீ கிருஷ்ணன் கோவில் ஆரண்முழா பார்த்தசாரதி கோவில் பந்தளம் ஐயப்பன் கோவில் மற்றும் முக்கிய கோவில்களுக்கு நெற்கதிர்களை நாளை எட்டாம் தேதி அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ராஜபாளையத்தில் இருந்து ஊர்வலமாக கொண்டு சென்று கோயில்களில் வழங்க உள்ளோம்.

வரு ஆக10ம் தேதி நிறைப்புத்தரிசி பூஜை வழிபாடு நடைபெறுகிறது.பக்தர்கள் நலமும் வளமும் பெற இந்த சேவையை செய்கிறோம் என்றார்.


Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply