682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
Thank you for reading this Dhinasari News Article.
Don’t forget to Subscribe!
கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன்
ஆசிரியர், கலைமகள்
சிதம்பரத்தில் நடைபெறும் ஆனித் திருமஞ்சனம் மிகவும் சிறப்புவாய்ந்தது. இதனைக் காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சிதம்பரத்தில் கூடுவார்கள். இந்த உற்சவத்தை பதஞ்சலி முனிவர் தொடங்கிவைத்தார் என்கின்றன ஹிந்து புராணங்கள். சிதம்பரத்தில் சிவபெருமானின் நடனக் காட்சியைக் காண விரும்பினார் பதஞ்சலி முனிவர். அந்தக் கதையைப் பார்ப்போம்…
ஓரு சமயம் ஆதிசேஷன் சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காணவேண்டுமென கயிலை சென்று சிவ பெருமானிடம் தன் ஆசையை வெளிப்படுத்தினார். அதற்கு சிவன் பூலோகத்தில், தில்லை ஸ்தானத்தில் தான் காட்சியளிக்க உள்ளதாகவும், அதைக் காண ஏதுவாக அத்திரி மகரிஷியின் மகனாக அவதரித்து பூலோகம் செல்ல வரம் கொடுத்து ஆதிசேஷனைப் பணிக்கிறார்.
அத்திரி மகரிஷி நதிக் கரையில் சூரியனை எண்ணி அர்க்கியம் கொடுக்கும் பொழுது ஐந்து முகங்களுள்ள ஒரு குழந்தையாக அவர் கைகளில் வந்து தவழுகிறார் ஆதிசேஷன். மகரிஷியும் அந்தக் குழந்தையை எடுத்து “பதஞ்சலி” என்ற பெயரிட்டு வளர்க்கிறார்.
அத்திரி மகரிஷி சிவனின் ஆனந்த தாண்டவத்தைக் காண விருப்பம் கொண்டு தவம் செய்ய ஆயத்தம் ஆகிறார். அப்போது பதஞ்சலியும் அவருடன் சேர்ந்து தவம் மேற் கொள்கிறார்.
இவர்களின் தவத்தை மெச்சிய ஈசன் ஒரு தைப்பூச நாளில் இவர்களுக்கு ஆனந்த தாண்டவத்தைக் காட்டி அருள்கிறார்.
இந்த பதஞ்சலி முனிவர் ஒரே நேரத்தில் ஆயிரம் சீடர்களுக்கு ஆயிரம் தலைகளுடன் திரை மறைவில் இருந்து வியாகரண மகாபாஷ்யத்தைக் கூறினார் என்றும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.
பதஞ்சலி யோக சூத்திரங்கள் 1. சமாதி, 2. சாதனை, 3. விபூதி, 4. கைவல்யம் என்று நான்கு பிரிவுகளைக் கொண்டு196 சூத்திரங்கள் கொண்டது. யோக சூத்திரங்களின் முக்கியத்துவம் என்னவென்றால் பலகாலமாகவே ஒரு வழிமுறையாக கடைப்பிடிக்கப்பட்ட யோக முறைகளை வகுத்து தொகுத்து அளித்ததுதான்…
பதஞ்சலி முனிவர் யோகக் கலைக்கு ஒரு சூத்திரத்தை உருவாக்கியவர். அதாவது யோகக் கலை மூலம் எப்படி ஒருவன் சமாதி நிலையை – ஞானத்தை- அடைய முடியும் என்பதை ஒரு மொழி இலக்கணத்தைத் தந்தவர். அவர் அதை அஷ்டாங்க யோகக் கலை அதாவது மனதில் பரிபூரண ஆனந்த நிலையை அடைய ஒருவர் எட்டு படிகளைக் கடக்க வேண்டும் என்று கூறி அந்த எட்டு வழிகளை கீழ்க்கண்டவாறு விளக்குகிறார்.
- யம
தன்னை அன்புள்ளவனாக, உண்மையானவனாக மாற்றிக் கொள்ள வேண்டும் . ( முன்னர் எப்படி இருந்தாலும் சமாதி நிலை அடைய முடிவு செய்தவுடன் இதை கடைபிடிக்க வேண்டும்) - நியம
தன்னை தூய்மை உள்ளவனாக, பொறுமை உள்ளவனாக மாற்றிக் கொள்ள வேண்டும் - ஆசனா
மனதை கட்டுப்படுத்திக் கொண்டு ஒரே இடத்தில் நிலையாக பல மணி நேரம் அமர்ந்து இருக்க பழக்கிக் கொள்ள வேண்டும் - பிரணாயா
மூச்சை அடக்கி வைத்துக் கொண்டு மனத்தையும் கட்டுப்படுத்தும் இந்த முறையை முறையாக பயின்று கடை பிடிக்க வேண்டும். - பிரத்யாஹரா
நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை மன ஓட்டத்தின் எண்ணத்தில் இருந்து அகற்றும் முறை. - தாரணா
ஒரே குறிகோளுடன் அமர்வது. மனதில் ஒரு வடிவத்தை நினைத்துக் கொண்டு அதுவே மனதில் நிலையாகத் தோன்றுமாறு செய்து கொள்ளும் நிலை. - த்யானம்
மேலே உள்ளவைகளின் அடுத்தக் கட்டம். நம்மை சுற்றி என்ன நடந்தாலும் அது காதில் விழக் கூடாது. மனது அந்த ஒரே வடிவத்தையேப் பார்த்தவாறு இருக்க வேண்டும். அதைத் தவிர வேறு எதுவுமே மனதில் தோன்றக் கூடாது. - சமாதி
மனதையும் எண்ணங்களையும் அடக்கத் தெரிந்தவுடனேயே உங்கள் உள்ளத்தில் அனைத்தைப் பற்றிய உண்மைகளும் புரிய ஆரம்பிக்கும். மனதில் விருப்பு வெறுப்பு தோன்றாது. மனித எல்லைகளுக்கு அப்பாற்பட்ட நிகழ்வுகளைக் காண இயலும். மனதில் அசாத்தியமான அமைதியும் ஆனந்தமும் ஏற்படும். இறைவனுடன் கலந்து விட்ட நிலை தோன்றும்.
பதஞ்சலி யோகத்துக்கு பல உரைகள் பண்டைக்காலம் முதல் உள்ளன. வியாச பாஷ்யமே முதல் உரை. அதுவே அடிப்படையானதுமாகும். இவ்வுரை சாங்கிய பிரவசன பாஷ்யம் எனப்படுகிறது. சாங்கிய பாஷ்யத்தின் நீட்சியாகவே வியாசர் யோகத்தைக் காண்கிறார் . வாஸஸ்பதி மிஸ்ரர்ரின் ‘விசாராதி ‘ என்ற உரையும் புகழ் பெற்றது .
முதலாம் நூற்றாண்டில் யோக சூத்திரத்திற்கு எழுதிய உரையின் அடிப்படையிலும் மற்ற இலக்கியங்களை ஆய்வு செய்ததன் அடிப்படையிலும் கிமு 400 ஆண்டு வாக்கில் பதஞ்சலி சூத்திரம் எழுதப் பட்டிருக்கலாம் என்று தெரிய வருகிறது!! பதஞ்சலி முனிவர் வேறு பதஞ்சலி சித்தர் வேறு என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சிதம்பரம் என்பதற்கு என்ன பொருள்?
சிதம்பரம் என்ற சொல் சித் என்ற சமஸ்கிருத வார்த்தையிலிருந்து உருவானது, அதாவது “உணர்வு” மற்றும் அம்பரம், அதாவது “ஆகாயம்” (ஆகாசம் அல்லது ஆகாயத்திலிருந்து). இது அனைத்து வேதங்கள் மற்றும் வேதங்களின் இறுதி இலக்கான சிடாகாசம் அல்லது நனவின் வானத்தைக் குறிக்கிறது.
சிதம்பரம் கோவிலின் சிறப்பு:
தெய்வம் திருமூலா நாதர் ஒரு சுயம்பூமூர்த்தி. ஆனாலும், நடராஜர் ஆளும் தெய்வம். பஞ்சபூத ஸ்தலங்களில் (இடங்கள்) சிதம்பரம் ஆகாயத்துக்கு சொந்தமானது. ஞானசம்பந்தர், திருநாவுகாரசர், சுந்தரர் ஆகியோரல் பாடப்பெற்ற ஸ்தலம்.