வசந்த காலத்தின் துவக்க விழா-யுகாதி பண்டிகை..

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்
/03/e0aeb5e0ae9ae0aea8e0af8de0aea4-e0ae95e0aebee0aeb2e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d-e0aea4e0af81e0aeb5e0ae95e0af8de0ae95-e0aeb5.png" alt="FB IMG 1679420080073 - Dhinasari Tamil" class="wp-image-280874" width="362" height="332" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2023/03/e0aeb5e0ae9ae0aea8e0af8de0aea4-e0ae95e0aebee0aeb2e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d-e0aea4e0af81e0aeb5e0ae95e0af8de0ae95-e0aeb5-3.png 996w, https://www.deivatamil.com/wp-content/uploads/2023/03/e0aeb5e0ae9ae0aea8e0af8de0aea4-e0ae95e0aebee0aeb2e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d-e0aea4e0af81e0aeb5e0ae95e0af8de0ae95-e0aeb5-4.png 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2023/03/e0aeb5e0ae9ae0aea8e0af8de0aea4-e0ae95e0aebee0aeb2e0aea4e0af8de0aea4e0aebfe0aea9e0af8d-e0aea4e0af81e0aeb5e0ae95e0af8de0ae95-e0aeb5-5.png 768w" sizes="(max-width: 362px) 100vw, 362px" title="வசந்த காலத்தின் துவக்க விழா-யுகாதி பண்டிகை.. 1 - Dhinasari Tamil" data-recalc-dims="1">
500x300 1853231 today events - Dhinasari Tamil

யுகாதி பண்டிகை தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு பிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகை தென்னிந்தியா முழுவதிலும், வட இந்தியாவின் சில பகுதிகளிலும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

வசந்த காலத்தின் துவக்க விழாவாகவும் யுகாதி கொண்டாடப் படு கிறது. யுகாதி பண்டிகையானது சந்திரனின் இயக்கத்தின் அடிப்படையிலேயே கணக்கிடப்பட்டு கொண்டாடப்படுகிறது.

யுகாதி பண்டிகை என்பது தென்னிந்தி யாவில் கொண்டாடப்படும் முக்கியமான பண்டிகையாகும். ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, கொங்கன் ஆகிய பகுதிகளில் இந்த பண்டிகை கொண்டா டப்படுகிறது. தெலுங்கு மற்றும் கன்னட மொழி பேசும் மக்கள் இந்த பண்டிகையை யுகாதி என்றும், மகாராஷ்டிர மக்கள் இதை குடிபாட்வா என்றும், சிந்தி மக்கள் சேதி சந்த் என்ற பெயரிலும் கொண்டாடுகிறார்கள்.

IMG 20230322 WA0049 - Dhinasari Tamil

யுகா என்ற சொல் வயது என்பதையும், ஆதி என்ற சொல் துவக்கம் என்பதை யும் குறிக்கும். பொதுவாக யுகாதி பண்டிகை பங்குனி மாத அமாவாசைக்கு மறுநாள் வரும் பிரதமை திதியி லேயே கொண்டாடப்
படுகிறது. அந்த நாளில் ஒரு நாளிகை அமாவாசை திதி இருந்தாலும், அதற்கு அடுத்த நாளினையே கணக்கில் எடுத்துக் கொண்டு யுகாதி கொண்டாடப்
படுகிறது.

2023 ம் ஆண்டு யுகாதி பண்டிகையானது இன்று மார்ச் 22 ம் தேதி புதன்கிழமை கொண்டாடப்படுகிறது .இன்று அதிகாலை 12.01 வரை மட்டுமே அமாவாசை திதி உள்ளது. பிறகு இரவு 10.24 வரை பிரதமை திதியும், அதற்கு பிறகு துவிதியை திதியும் வருகிறது. சூரிய உதய நேரத் திற்கு முன்பாகவே அமாவாசை முடிந்து விடுவதால், அன்று நாள் முழுவதும் பிரதமை திதியாகவே கணக்கில் கொள்ளப் படுகிறது.

இந்து புராணங்களின் படி, பிரம்ம தேவன் தனது படைப்பு தொழிலை துவங்கிய நாளே யுகாதி பண்டிகையாக நாம் கொண்டாடுகிறோம். இது கலியுகம் துவங்கிய நாளாகவும் கருதப்படுகிறது. சைத்ர மாதத்தில் இந்த நாள் வசந்த காலத்தின் ஆரம்பத்தை குறிப்பதால் இது மிக முக்கியமான நாளாக கருதப்படுகிறது.

இந்த நாள் புதிய முயற்சிகள் மேற்கொள்வதற்கு ஏற்ற நாளாக கருதப்படுகிறது. தமிழ் மற்றும் மலையாள மாதங்கள் சூரியனின் இயக்கத்தை அடிப்படையாக வைத்து கணக்கிடப் படுவதை போல், தெலுங்கு மற்றும் கன்னட மொழி மாதங் கள் சந்திரனின் இயக்கத்தை பொறுத்தே கணக்கிடப்படுகிறது.

யுகாதி அன்று அதிகாலையில் எழுந்து எண்ணெய் குளியல் செய்து, புத்தாடைகள் அணிந்து, யுகாதி அல்லது உகாதி பச்சடி உடனான அறுசுவை விருந்து சமைத்து, பண்டிகையை கொண்டாடுவர்.

மனித வாழ்க்கை என்பது இன்பம், துன்பம், மகிழ்ச்சி, துக்கம், வெற்றி, தோல்வி என அனைத்து கலந்தது என்பதால் வெல்லம், வேப்பம்பூ, மாங்காய், புளி, உப்பு, மிளகாய் என அனைத்தையும் சேர்த்து பச்சடி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர். தமிழ் புத்தாண்டு அன்று தமிழர்களும் இதே பச்சடி செய்யும் வழக்கம் உள்ளது. மாவிலை தோரணங்களாலும், வண்ண வண்ண கோலங்களால் வீட்டை அழகுபடுத்துவர். தமிழ் புத்தாண்டை போலவே யுகாதி பண்டிகை அன்றும் பஞ்சாங்கம் படிக்கும் வழக்கம் உள்ளது.

சதாயூர் வஜ்ர தேஹாய சர்வ சம்பத்கராய ச
சர்வாரிஷ்ட விணாசாய நிம்பஸ்ய தல பக்ஷ்ணம்

யுகாதியான இன்று இந்த ஸ்கோகத்தை சொல்லி வெல்லம் மற்றும் வேப்பம் பூ கலந்த பச்சடியை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் மேம்படும், அனைத்து நலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply