e0aebfe0aeaf-e0aeb5e0aeb4e0aebf-e0ae86e0ae9ae0af8de0ae9a.jpg" style="display: block; margin: 1em auto">
சாதாரணமான ஜனங்கள் பக்தி வழியையே எளிதானது என்று கருதுவார்கள். கர்ம மார்க்கத்தை அனுசரிக்கலாம் என்றால் அதற்கு எவ்வளவோ நியமங்கள் தேவை. அவ்வளவு நியமங்களையும் அனுசரிப்பதென்பது யாருக்கும் சாத்தியப்படாது.
ஞான மார்க்கத்தை அனுசரிக்கலாம் என்றால் அதற்கும் சாதன சதுஷ்டயம் (விவேகம், வைராக்யம், சமதமாதிஷட்க ஸம்பத்தி மற்றும் முமுக்ஷுத்வம்) என்னும் நான்கு தகுதிகள் வேண்டும்.
இதையெல்லாம் பார்க்கும் போது, பக்தி மார்க்கமே மிகவும் சுலபம் என்று தெரியும். யுதிஷ்டிரர், “தர்மங்களிலேயே எந்த தர்மம் சிறந்தது?” என்று பீஷ்மரிடம் கேட்டார். அதற்கு பீஷ்மர்,
ஏஷ மே ஸர்வதர்மாணாம் தர்மோதிகதமோ மத: I
யத்பக்த்யா புண்டரீகாக்ஷம் ஸ்தவைரர்சேன்னரஸ்ஸ்தா II
“பகவானை பக்தியுடன் வழிபடுவதே சிறந்த தர்மம்” என்றார்.
ஸ்ரீ விஷ்ணுஸஹஸ்ரநாமத்தில் வரும் இந்த சுலோகத்திற்குப் பாஷ்யம் எழுதுகையில் ஸ்ரீ சங்கரர் சில கருத்துக்களைக் கூறியிருக்கிறார். கர்மாக்களை செய்வதற்கு பல நியமங்களை அனுசரித்தாக வேண்டும். ஆனால், பக்திக்கு நியமங்கள் கிடையாது. கர்மங்கள் செய்யப்படும்போது குறைகள் நேரிடலாம்.
சாஸ்திரத்தில் ஓரிடத்தில்,
அவிதினா க்ருதம் அக்ருதம்
என்று சொல்லப்பட்டதால், முறையின்றிச் செய்யப்பட்ட கர்மமானது செய்யப்படாதது போலாகிவிடும்.
பக்தி விஷயத்தில் இப்படியெல்லாம் நேருவதற்கு அவகாசமேயில்லை. ஆகவே பக்தி மார்க்கம் தான் முக்தியடைய மிக எளிதான மார்க்கமாகும்.
முக்திக்கு எளிய வழி: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.