e0af8de0ae9fe0aea4e0aebee0aeb2.jpg" style="display: block; margin: 1em auto">
அன்று பண்டரியில் பயங்கர கூட்டம் நாம தேவரோ குரு வீசோபா கேசரிடம் ப்ரம்ம ஞானம் அடைந்த பிறகு பார்க்கும் இடமெல்லாம் வி்ட்டலனாகவே காட்சி ஆகையால் கோவிலின் உள்ளே இன்று பஜனை செய்யாமல் சந்ரபாகை நதி கரையில் அகண்ட நாம பஜனை செய்து கொண்டிருந்தார்
வெகு நேரம் அங்கேயே நாம பஜனை செய்து கொண்டிருந்தார் அப்போது அவர் மனைவி அவருக்கு காலை உணவுக்காக ரொட்டி கொண்டு வந்து கொடுத்தாள் இவரோ கண் ஜாடையில் அதை அங்கு வைத்து விட்டு போ என கூற அவளும் அப்படி வைத்து விட்டு செல்கிறாள்.
நாமதேவர் கண்ணை மூடி விட்டலனை பிரார்த்திக்கும் நேரத்தில் அங்கு வைத்திருந்த ரொட்டியை அங்கே பசியோடு அலைந்து கொண்டிருந்த ஒரு நாய் பார்த்துவிட்டு ஆவலோடு ஓடி வந்து அதை வாயில் கவ்விக்கொண்டு ஓடியது.
நாமதேவர் அந்த நேரம் பார்த்து கண்ணை திறந்தவர் நாய் ஒரு ரொட்டியை கவ்விக்கொண்டு ஓடுவதை பார்த்துவிட்டு அதன் பின்னே மிக வேகமாக ஓடினார்.
தன்னை ஒருவர் துரத்துவதை உணர்ந்த நாய் இன்னும் வேகமாக ஓடியது. விடவில்லை நாமதேவர் கூடவே ஓடினார் நாய் பயந்து இன்னும் வேகமெடுத்தது இவரோ விட்டலா விட்டலா என அலறி கொண்டு விரட்டினார் கடைசியில் நாயை அடைந்து அதை அன்பாக தடவி கொடுத்து அதன் வாயில் இருந்த ரொட்டியை பிடுங்கி அதில் நெய்யை தடவி அதற்கே ஊட்டினார் ஏன் என்றால் அந்த நாயில் விட்டலனை கண்டார்.
வெறும் ரொட்டியை எப்படி விட்டலனுக்கு அற்பனிப்பது என்று அதில் நெய்யை நிறைய தடவி ருசியாக அர்பணிக்க அவருக்கு எண்ணம். விட்டலா “உலகில் எதிலும் உன்னை தவிர வேறு யாரையும் நான் காணவில்லையே என்றார் பிறகு அந்த நாய் மறைந்தது விட்டலனே நாயுருவில் வந்தான்.
எதிலும் விட்டலன் கண்டதால் பெற்ற பயன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.