முனிவர்களுக்கு அருளிய திருத்தலம்!

ஆன்மிக கட்டுரைகள்

mugunthan - 5
mugunthan - 2

காடுகளின் வழியாகப் பயணித்துக் கொண்டிருந்த ஒன்பது முனிவர்களுக்கு, அவர்கள் சென்ற வழியில் இருந்த ஒரு இடம் பிடித்துப் போனது.

அந்த இடத்தில் அவர்கள் இறைவன் விஷ்ணுவை வேண்டித் தவம் செய்யத் தொடங்கினர். அவர்களில் எட்டு முனிவர்கள் ஒருவர் பின் ஒருவராக முக்தியடைந்தனர்.

இந்த நிலையில் ஒன்பதாவதாக இருந்த முனிவர் வருத்தமடைந்தார். அவர் முன்பாகத் தோன்றிய விஷ்ணு அவரது வருத்தத்திற்கான காரணத்தைக் கேட்டார்.

அம்முனிவர், “இறைவனே, இங்கு என்னுடன் தவமிருந்த எட்டு முனிவர்களும் முக்தி பெற்று விட்டனர். அவர்களுடன் அவர்கள் வழிபட்டு வந்த தங்களுருவச் சிலைகளும் மறைந்து போய்விட்டன.

thirunavai - 3

அவர்களைப் பிரிந்து நான் மட்டும் தனிமையில் இருப்பதால் வருத்தம் தோன்றுகிறது” என்றார். இறைவன் அவருடைய வருத்தத்தைப் போக்க, அவருக்கு எட்டு முனிவர்களையும் காட்டியருளினார்.

முனிவர் மகிழ்ச்சியோடு அவர்களனைவரையும் தன்னுடன் இருக்கும்படி வேண்டினார். அதற்கு அவர்கள், இறைவன் அருளால் நாங்கள் முக்தி பெற்று விட்டாலும், பிறர் கண்களுக்குத் தெரியாமல் இங்கு உங்களோடுதான் இருந்து கொண்டு இருக்கிறோம் என்றனர்.

அதைக்கேட்ட ஒன்பதாவது முனிவர் இறைவனிடம், தானும் பிறர் கண்களுக்குத் தெரியாமலிருக்க அருளும்படி வேண்டினார். இறைவனும் அவர் வேண்டியதை வழங்கினார். அவர் வழிபட்டு வந்த இறைவனின் திருவுருவச் சிலையையும் தன்னுடன் மறைந்து வந்தடையச் செய்யும்படி இறைவனிடம் வேண்டினார்.

இறைவன் ஒன்பதாவது முனிவரிடம், “முனிவரே, நானும் இங்கிருந்து தங்களுடன் மறைவாக வந்துவிட்டால், இந்த இடம் ஒன்பது முனிவர்கள் வழிபட்டு முக்தியடைந்த இடம் என்பது மற்றவர்களுக்குத் தெரியாமலே போய்விடும்.

thirunavai 1 - 4

பிறர் கண்களுக்குத் தெரியாத நீங்கள் இங்கிருக்கும் நதியில் நீராடி, இங்குள்ள மலர்களைப் பறித்து இந்தத் திருவுருவச் சிலையினை அலங்கரித்து எப்போதும் போல் வழிபட்டு வாருங்கள். பிற்காலத்தில் இந்த இடம் அனைவரும் வழிபடும் சிறப்பு மிகுந்த இடமாகி விடும்” என்றார்.

அதைக் கேட்டு மகிழ்ந்த அம்முனிவர் இறைவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டதுடன், இறைவன் சொல்லியபடி பிறர் கண்ணுக்குத் தெரியாமல் தொடர்ந்து வழிபாடு செய்து வரச் சம்மதித்தார்.

இறைவனும் ஒன்பதாவது முனிவர் வழிபட்ட திருவுருவச்சிலையின் வடிவிலேயே அங்கு கோவில் கொண்டார் என்று இத்தலம் அமைந்த வரலாறு சொல்லப்படுகிறது. இத்தலமே திருநாவாய் நவ முகுந்தன் கோயில் ஆகும்

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றாகும்.திருமங்கையாழ்வார் மற்றும் நம்மாழ்வாரால் பாடல் பெற்ற இத்தலம் கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் திருநாவாய் என்ற ஊரில் அமைந்துள்ளது

முனிவர்களுக்கு அருளிய திருத்தலம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply