ஊர்மிளையின் வேண்டுதலும்.. இராமர் அளித்த வரமும்..!

ஆன்மிக கட்டுரைகள்

ramar 1
ramar 1
ramar 1

இராமர் தன் தம்பி லக்ஷ்மணனுடைய மிக உயர்ந்த தியாகத்தினாலும் அர்ப்பணிப்பு உணர்வினாலும் தான் இந்த மிக பெரிய வெற்றி பெற்றோம், தம்பியுடைய தியாகம் ஈடு இணை இல்லாதது என்று கூறினார்.

பின்னர் உன்னதமான தியாகம் புரிந்த லக்ஷ்மணனின் மனைவி ஊர்மிளாவை புகழ்ந்து கூறினார். லக்ஷ்மணன் இல்லாமல் பதினான்கு வருடங்கள் ஊர்மிளா கழிக்க நேர்ந்தது.

நான் எனது மனைவியுடன் பதினான்கு வருடங்கள் காட்டில் கழித்தேன் ஆனால் ஊர்மிளா மிகவும் உயர்ந்த தியாகம் செய்திருக்கின்றாள்.

இந்த பதினான்கு வருடங்களும் லக்ஷ்மணனின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தாள் எல்லா புகழும் ஊர்மிளாவிற்கே என்று கூறினார்.

அயோத்தியாவில் நமக்கு மூன்று சிம்மாசனங்கள் இருக்கிறது ஒன்று எனக்கு மற்றொன்று சீதைக்கு மற்றொன்று லக்ஷ்மணனுக்கு. இன்றிலிருந்து ஊர்மிளாவிற்காக நான்காவது சிம்மாசனம் ஏற்பாடு ஆகட்டும் என்று ஆணையிட்டார்.

ஊர்மிளா கூப்பிய கரங்களுடன் ராஜா ராமரிடம் கூறினாள் .அரசே எனக்கு சிம்மாசனத்தின் மீது எந்த பற்றுதலும் இல்லை. எனக்கு உங்களுக்கு சேவை செய்ய சந்தர்ப்பம் மட்டும் அளிக்க வேண்டும் எனக்கு வேறு எந்த ஆசையும் இல்லை என்றாள்.

ராமர் மிகவும் மகிழ்ந்து அவளிடம் வேறு ஏதாவது வரம் வேண்டுமானாலும் கேட்கலாம் என கூறினார்.

அப்போது மிகவும் பணிவுடன் இருகரம் கூப்பி தாங்கள் எனக்கு ஏதாவது வரம் தர நினைத்தால் இனி வரும் காலங்களில் எனக்காக கோவில்களோ அல்லது வழிபாடோ கூடாது.

நான் எல்லோருக்கும் மனம் தரும் ஒரு ஊதுபத்தியாக இருக்க விரும்புகின்றேன். இனிவரும் காலங்களில் நான் தங்களது தாமரை பாதத்திற்கு கீழ் நிவேதனமாக இருக்க விரும்புகின்றேன் எனக் கூறினாள்

பகவான் ஶ்ரீ ராமசந்திரன் ஊர்மிளாவின் பக்தியை கண்டு பின்வருமாறு கூறினார். ஸவரப்போகும் கலியுகத்தில் நான் பூரி க்ஷேத்திரத்தில் அவதரிக்கும் போது லக்ஷ்மிதேவி எனது அருகில் இருக்க மாட்டாள் .

லக்ஷ்மணன் எனது மூத்த சகோதரராக பலராமர் என்ற பெயருடன் என் அருகில் இருப்பார். எனக்கு நெய்வேதியம் செய்யப்படும் எந்த பிரசாதமும் மகா பிரசாதமாக மாறுகிறது .நீ அந்த மகா பிரசாதமாக இருப்பாய்.

உமது இனிய நறுமணத்தால் தெய்வீகத்தை பரப்புவாய். நீ மகா பிரசாதமாகவும் நிர்மால்யமாகவும் வரும் காலங்களில் விளங்குவாய். பக்தர்கள் உன்னை வழிபட்டு புண்ணியம் அடைவார்கள். என்று வரமளித்தார்.

ஊர்மிளையின் வேண்டுதலும்.. இராமர் அளித்த வரமும்..! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply