துக்காராம் மகராஜ் அவர்களுக்கு அவர் மனைவியான ஆவளீ ஏதோ வீட்டில் இருந்த சிறிது மாவை வைத்து இரண்டு சுக்கா ரொட்டி தயார் செய்து கொண்டு செல்ல ஆயுத்தமானார்.பாவம் அதற்கு தொடு கறி செய்ய கூட இயலாத வறுமை வேறு வெறும் சுக்கா ரொட்டி.
துக்காராம் மகராஜ் பண்டார மலை என்னும் இடத்தில் விருட்ச வல்லி மரத்தின் கீழே அமர்ந்து அபங்கம் இயற்றி பாடி கொண்டிருப்பார்.
அந்த அம்மையோ காட்டின் மைய பகுதிக்கு சென்று கொண்டிருக்க அவள் காலில் ஒரு விஷமுள் தைக்க அங்காயீ (அங்காளம்மன்) என அவளது குலதெய்வத்தை அழைத்தார்.
“சடார் என பாண்டுரங்கன் வந்து நின்றான்”.இந்த பெண்மணிக்கோ விட்டலனை கண்டால் பிடிக்காது.. ஹே கருப்பா… நீ ஏன் இங்க வந்த நான் உன்ன கூப்பிடலயே.. என் வீட்டுக்காரர பைத்தியமாக்கி இப்படி உட்கார வச்சி இருக்கியே… உனக்கு இது நியாயமா சொல்லு..
விட்டலன் சிரித்து கொண்டே ஆவளீ உங்களுக்கு என்ன குறை வச்சேன் உன் வீட்டுகாரர் கடனெல்லாம் நானே அடச்சேன், அது மட்டுமன்றி துக்காராம் உனக்கு என்ன வேணும்னு கேட்டேன்.. துகாவோ ஒன்னும் வேணானு சொல்லிட்டார்.
நான் என்ன செய்ய என சொல்லி ஆவளீயின் காலை எடுத்து தன் தொடை மேல் வைத்து அந்த முள்ளை பிடுங்கினான் “விட்டலன்”.முப்பத்து முக்கோடி தேவர்களலெல்லாம் இவர் பாதத்தை நாம் பற்ற யுக யுகமாக தவமிருக்குறோம்,
இவரோ அடியார்க்காக அவரின் மனைவி காலை பற்றி இருக்கிறாரே என வியந்தனர்.தன் பக்தனுக்கும் அவர்கள் குடும்பத்திற்கும் ஏதேனும் ஒரு கஷ்டம் எனில் ஓடி வருவான் பரந்தாமன்
பக்தனுக்காக பாதத்தை பிடித்து முள்ளை எடுத்த பாண்டுரங்கன்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.