e0af8de0ae9fe0aebee0ae95e0aebfe0aeb1e0aea4.jpg" style="display: block; margin: 1em auto">
இந்த தர்மத்தின் விஷயத்திலே யாருக்கும் எந்த சமயத்திலும் உபேக்ஷா புத்தி இருக்கக் கூடாது.
உபேக்ஷா புத்தி என்று ஸம்ஸ்க்ருதத்திலே சொல்லுவார்கள். “அதை செய்தாலென்ன செய்யாவிட்டால் என்ன? அதை செய்யத்தான் வேண்டுமா என்ன?” இந்த மாதிரி பாவனைகள் “உபேக்ஷா” பாவனைகளெனப்படும்.
அப்பேற்பட்ட உபேக்ஷை தர்மத்தின் விஷயத்திலே இருக்கக் கூடாது. மீதி எந்த விஷயத்திலே அந்த உபேக்ஷை இருந்தாலும் பாதகம் இல்லை.
தர்மத்தின் விஷயத்திலே உபேக்ஷை புத்தி இருந்தால் மிகவும் பாதகம் ஆகும்; மிகவும் தொந்தரவு ஆகும். மனிதன் தன் வாழ்க்கையில் எப்பொழுதும் விரும்பிக்கொண்டிருக்கும் இன்பம் என்பது தர்மத்தின் ஆசரணத்தில்தான் உண்டாகும்.
எல்லா மனிதர்களும் தங்களுடைய வாழ்க்கையில் எதைத் தங்களுக்கு வேண்டாம் என்று சொல்கிறார்களோ அந்தத் துன்பமானது அதர்மத்தின் ஆசரணத்தினால்தான் உண்டாகிறது.
அதர்மத்தினால் உண்டாகிறது: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.