மனிதனின் ஜீவிதத்திலே எவ்வளவோ முன்னுக்கு வந்தாலும் குருபக்தி என்ற ஒன்று இல்லையென்றால் அவனுடைய வாழ்க்கை வீண்தான்” என்று பகவத்பாதாளே சொன்னார்.
அதனால் நாம் எவ்வளவு பெரிய மனிதரானாலும் எவ்வளவு பெரிய படித்தவர்களானாலும் எவ்வளவு பணக்காரர்களானாலும் குருபக்தி என்பது பரம அவசியம்.
“ஸம்ப்ரதாய பரிபாலன புத்த்யா” என்றபடி சங்கரர் தம்முடைய குருவாகிய கோவிந்தபகவத்பாதாளை அத்யந்த ஸ்ரத்தா பக்திகளோடு சேவித்தார் என்கிறபோது நமக்கும் குருபக்தி பரம அவசியம் என்று தனியாக சொல்ல வேண்டியதே இல்லை.
அந்த குருபக்திதான் நமக்கு எல்லாவிதமான சிரேயஸ்ஸை உண்டாக்கும். பரமேஷ்டி குருநாதர் ஸ்ரீ ந்ருஸிம்ஹ பாரதீ மஹா ஸ்வாமிகள் ஓரிடத்திலே, “குருவினுடைய அனுக்ரஹம் இல்லாவிட்டால் உலகத்திலே யாருக்குத்தான் இஷ்டார்த்தங்கள் கிடைக்கும்? ஆகையினால், எல்லா செளக்கியங்களுக்கும் எல்லா நன்மைகளுக்கும் மற்றும் எல்லா சிரேயஸ்களுக்கும் மூல காரணமான குருபாதத்தை நீ வழிபடு” என்று உபதேசம் பண்ணினார்.
நமக்கு மஹான்கள் எல்லாம் உபதேசம் பண்ணுவது நாம் நன்றாக இங்கு சிரேயஸ்ஸை அடைய வேண்டும் என்பதற்காகத்தான். அவர்களுடைய உபதேசங்களை அனுசரித்து நாம் நம் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வந்தால் நமக்கு நன்மை விளையும். அப்படி அவற்றைக் கடைப்பிடிக்கவில்லை என்றால் நமக்குத்தான் இழப்பு! அவர்களுக்கு ஒன்றும் இல்லை!
குரு பக்தி அவசியம்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.