e0af8d-e0ae85e0aeb0.jpg" style="display: block; margin: 1em auto">
ஸீலோகத்தில் “தேஹ வாஸனை” யைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. தேஹ வாஸனையும் மூன்று விதமாகும்.
தேஹே ஆத்மத்வப்ராந்தி:
தேஹே குணாதானப்ராந்தி:
தேஹே தோஷாபனயப்ராந்தி:
இதில் முதலாவதான “தேஹே ஆத்மத்வ ப்ராந்தி” யைப் பற்றி இப்போது பார்ப்போம்.
சார்வாகர்கள் உடலையே ஆத்மா என்று கருதுகிறார்கள். உடலிலிருந்து வேறுபட்ட ஆத்மா கிடையாது என்பது அவர்களது மதம். ஆனால், அது மிகவும் தவறானது என்று மற்ற தார்சனீகர்கள் அவ்வளவு பேரும் விளக்கிவிட்டனர்.
சரீரமே ஆத்மா என்றால் பிறந்தவுடன் குழந்தைக்கு தான் பாலைச் சாப்பிட வேண்டும் என்னும் நினைவு எவ்வாறு ஏற்படுகிறது? நினைவு இப்போது வர வேண்டுமானால், பாலைச் சாப்பிட்டால் பசி அடங்கும் என்ற அனுபவம் முந்தைய பிறவியில் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆகவே, இப்போதைய அறிவு முந்தைய அனுபவத்திலிருந்துதான் ஏற்பட்டிருக்க வேண்டும்.
நாம் என்றாவது ஒருவரைப் பார்த்திருந்தால்தான் அவரை இப்போது நமக்கு ஞாபகம் வரும். பார்த்திருக்காவிட்டால் அவரை எப்படி ஞாபகம் வைத்துக்கொள்வது? முன்பு ஒருவரைப் பார்த்த நபரும் இப்போது அவரை ஞாபகப்படுத்திக்கொள்ளும் நபரும் ஒருவராகவே இருக்க வேண்டும். இல்லாவிட்டால் வேறொருவர் பார்த்த ஒன்றை இன்னொருவர் எப்படி ஞாபகப்படுத்திக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழும்.
ஆகவே, குழந்தையானது பாலைக் குடிக்க வேண்டும் என்று அறிவதற்கு அதற்கு முந்தைய பிறவி ஒன்று இருந்திருக்க வேண்டும். இதைப் போன்ற பல விதமான யுக்திகளைக் காட்டி சார்வாகர்களின் கொள்கையை மற்ற தர்சனங்களைச் சேர்ந்தவர்கள் நிராகரித்து விட்டனர். ஆகவே, தேஹ வாஸனையில் முதல் விதமான “தேஹமே ஆத்மா” என்ற எண்ணம் மிகத் தவறானதாகும்.
எது ஆத்மா? ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.