e0af8de0ae9f-e0ae86e0aeafe0af81e0aeb3e0af88e0aeaae0af8d-e0aeaae0af86e0aeb1-e0ae86e0ae9ae0af8de0ae9ae0aebee0aeb0.jpg" style="display: block; margin: 1em auto">
சிலர் என்ன விரும்புகிறார்கள்? நீண்ட ஆயுளை விரும்புகின்றனர். இது பெரும்பான்மையினரது ஆசை. யாரும் ‘சாவு’ என்பதில்லாமல் இருக்க முடியாது. ஆனால் (இறைவனுடைய அருளினால்) நீண்ட ஆயுளைப் பெறலாம்.
சுலோகம் சாஸ்திரத்திற்கும் அனுபவத்திற்கும் பொருத்தமாக உள்ளது.
தலையில், மேல் நோக்கியவாறுள்ள ஒரு தாமரையில் மகரந்தத்தைப் போல் அமிருதம் உள்ளது. அந்த அமிருதப் பொழிவைப் பெறுவதற்குத்தான் ‘லம்பிகா யோகம் ‘ என்று சொல்வார்கள். நமது நாக்கை மெல்லியதாய் ஆக்கிக் கொண்டுவிட்டு வாய்க்கு உள்புறமாக மடித்து மூக்கின் பக்கமாக உள்ள துளை வழியாக தலையின் மேல் பாகம் வரைக் கொண்டு போக வேண்டும். அப்போது அங்குள்ள அமிருதப்பொழிவைப் பெற்றால் மிகுந்த ஆனந்தம் ஏற்படுகிறது. சாதாரண மனிதர்களுக்கு இத்தகைய யோக சாஸ்திரம் தெரியாது;
அத்தகைய கிரியைகளெல்லாம் தெரிவதில்லை. அம்பாளின் உருவத்தைக் கண்டு ஆனந்தம் பெறுவதும் அதைத் தியானம் செய்வதும்தான் நமக்குத் தெரியும். சுலோகத்தில்,
“ சீதலபீயூஷவர்ஷிணீம் “
என்று சொல்லப்பட்டது, ‘தலையில் மேலுள்ள சஹஸ்ராரத் தாமரையினுள் அம்பாள் வீற்றிருக்கிறாள். அங்கிருந்து அமிருதப் பொழிவை ஏற்படுத்துகிறாள்’ என்று தியானம் செய்ய வேண்டும். அந்த அமிருதம் வயிற்றிற்குள் நிரம்பி, நமக்குத் திருப்தியையும் நீண்ட ஆயுளையும் கொடுக்கும். அந்த அமிருதம் எவ்வாறுள்ளது?
‘சீதல’ என்று கூறப்பட்டதால் குளிர்ச்சியைத் தரும் அமிருதம் ஆகும் அது; சூடானதல்ல. அப்பேற்பட்டவளாக அம்பாளைத் தியானம் செய்ய வேண்டும். அவ்வாறு எப்போதும் தியானம் செய்து கொண்டிருந்தால் ஒருவன் நீண்ட ஆயுளைப் பெறலாம்.
“ ஆயுஷ்யம் ப்ரஹ்மபோஷ்யம் “
என்று சுலோகத்தில் கூறப்பட்டுள்ள ஆயுளைப் பற்றிக் கூறுவர்.
அதாவது பிரஹ்மாவின் ஆயுள் வரை நமக்கு ஆயுள் கிடைக்கும். (அவ்வளவு நீண்ட ஆயுள் கிடைக்கும்) என்பது பொருள்.
நீண்ட ஆயுளைப் பெற.. ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.