இப்படி இருந்தது ஸ்ரீ ராம ராஜ்ஜியம்!

ஆன்மிக கட்டுரைகள் விழாக்கள் விசேஷங்கள்

00" height="186" src="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0ae87e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf-e0ae87e0aeb0e0af81e0aea8e0af8de0aea4e0aea4e0af81-e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeb0e0aebee0aeae-1.jpg" class="attachment-medium size-medium wp-post-image" alt="ramar" style="margin-bottom: 15px;" srcset="https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0ae87e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf-e0ae87e0aeb0e0af81e0aea8e0af8de0aea4e0aea4e0af81-e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeb0e0aebee0aeae.jpg 484w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0ae87e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf-e0ae87e0aeb0e0af81e0aea8e0af8de0aea4e0aea4e0af81-e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeb0e0aebee0aeae-2.jpg 300w, https://www.deivatamil.com/wp-content/uploads/2021/04/e0ae87e0aeaae0af8de0aeaae0ae9fe0aebf-e0ae87e0aeb0e0af81e0aea8e0af8de0aea4e0aea4e0af81-e0aeb8e0af8de0aeb0e0af80-e0aeb0e0aebee0aeae-3.jpg 150w" sizes="(max-width: 300px) 100vw, 300px" title="இப்படி இருந்தது ஸ்ரீ ராம ராஜ்ஜியம்! 8">
ramar
ramar

ஸ்ரீராமர் தம் ராஜ்யத்தின் உச்சக்கட்டத்தில் அசுவமேத யாகத்தை மேற்கொண்டார்.

அதற்கு முன், மேற்கொள்ள வேண்டியது ராஜசூய யக்ஞமா அல்லது அசுவமேத யாகமா என்பது பற்றி ஒரு சர்ச்சை எழுந்தது. ஸ்ரீராமர் ராஜசூய யக்ஞம் நடத்த வேண்டுமென்று விரும்பினார். அதற்கு பரதன் பணிவுடன், “அண்ணா, ராஜசூய யக்ஞத்தால் ராஜ வம்சங்கள் அனைத்தும் நாசமாகலாம்; மேலும் பூமி முழுவதிலும் பராக்கிரமம் நலிந்தும் போகலாம்” என்று அவருக்கு நினைவூட்டினார்.

ஸ்ஸ்ரீராமரோ ராஜ குலங் களை வளர்ப்பவர்; சகல உயிர்களையும்
தந்தையின் பரிவோடு பரிபாலிப்பவர். அத்தகைய ஒருவர் அரச குலங்களை அழித்து, வீரர்களின் மறைவுக்குக் காரணமாவதா? உயிர்ச்சேதம் விளைவிக்கும் ராஜசூய யக்ஞத்தை அவர் எவ்வாறு மேற்கொள்ள முடியும்?’ என்பது பரதன் வாதம்.

பாரத நாட்டின் சிறப்பான அரசியல் அமைப்புக்கு இலக்கணமாய்த் திகழ்ந்த ராமராஜ்யத்தின் அடிப்படை நோக்கங்களை நினைவு கூர்வதுதான் இந்த விவாதத்தின் நோக்கம் போலும். ராமராஜ்யத்தில் அரசியல் அதிகாரம் பரவலாகப் பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் முதல் அத்தியாயத்திலேயே ‘அரச குலங்கள் நூறு மடங்கு விருத்தியடைவது ஸ்ரீராமரின் ஆட்சிக் காலத்தின் ஒரு சிறப்புத் தன்மை’ என்று போற்றப்படுகிறது.

தம் சகோதரர்களின் ஆலோசனையை ஏற்று ஸ்ரீராமர் அசுவமேத யாகம் நடத்துவதென்று தீர்மானித்தார்.

உடனே ஸ்ரீராமர் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி காஷ்யப்பர் முதலான சிறந்த பிராமணர்களை அழைத்தார்.
பின்னர் அவர்களிடம், “சான்றோர்களே,
அசுவமேத யாகம் நடத்த நான் தீர்மானித்துள்ளேன்.

யாகம் சிறப்பாக நிறைவேற தங்களது
ஆசிகள் எனக்கு வேண்டும்” என்றுக் கூறி
அவர்களிடம் ஆசி பெற்று யாகத்திற்க்கான ஏற்ப்பாடு களைத் தொடங்கினார்.

முதல் கட்டமாக, ஸ்ரீராமர் லட்சுமணனிடம் வானரராஜன் சுக்ரீவனையும், அரக்கர்கோன் விபீஷணனையும் வரவழைப்பதற் கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கூறி மானிடரல்லாத வேறு இனங்களைச் சேர்ந்த சாம்ராஜ்யங்களின் இந்த இரண்டு மாமன்னர்கள் யாகத்திற்கு வருகை தரும் அதிதிகளைக் கவனித்து உபசரிக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.

ரிஷிகள், பிராமணர்கள், தபஸ்விகள் மன்னர்கள். வித்வான்கள், கலைவல்லுனர்கள் முதலான எல்லோரையும் அழைக்குமாறு ஸ்ரீராமர் லக்ஷ்மணனுக்கு உத்தரவிட்டார். அனைவரையும் தங்கள் சீடர்களுடனும் குடும்பத்தினருடனும் யாகத்திற்கு அழைக்குமாறும் அவர் கூறினார்.

பிறகு ஸ்ரீராமர் கோமதி நதிக்கரையில் உள்ள நைமிசாரண்ய வனத்தில் விசாலமான ஒரு யாக மண்டபம் அமைப்பதற்கு ஏற்பாடுகள் செய்தார். யாகம் எந்த விக்ன இல்லாமல் நடப்பதற்காக நூற்றுக்கணக்கான, தரும வித்தகர்களைக் கூட்டி சாந்தி கர்மம் துவக்கினார்.

இந்த ஏற்பாடுகள் அனைத்தும் பூர்த்தியடைந்த பின்னர் ஸ்ரீராமர், லட்சுமணனிடன் எந்தப் பாகுபாடும் இல்லாமல், எல்லா மக்களுக்கும் அழைப்பு விடுக்கும்படி கூறினார். யாகத்திற்கு வருகை தரும் அனைவரும் சிறந்த மரியாதை பெற்று, முழுநிறைவுடன் மிகுந்த மகிழ்ச்சி அடைய வேண்டிய ஏற்பாடுகளைசெய்யுமாறும் ஆணையிட்டார்.’

ஸ்ரீமத் வால்மீகி ராமாயணத்தின் வரிகளில் ஸ்ரீராமரின் கட்டளை இது:

‘வருகை தரும் அனைவரையும் ஆரோக்கியமானவர்களாகவும் மகிழ்ச்சியானவர்களாகவும், திண்மையும் நிறைவும் உடையவர்களாகவும் ஆக்கும் பொருட்டு, பெரிய அளவில் உணவு வழங்குற்கான ஆயத்தங்கள் அவசியம்.”

அதோடு ஸ்ரீராமர் யாகத்திற்கென்று சேர்க்க ஒண்டிய பொருட்குவியலைப் பற்றிக் குறிப்பிட்டு , “மகா பலசாலியான லட்சுமணா, லட்சக்கணக்கான வாகனங்களில் நல்ல தரமான அரிசி, தானியங்கள், எள், பச்சைப் பயிறு. உளுந்து, உப்பு ஆகியவற்றைத் திரட்டு. பின்னர் அவை அனைத்திற்கும் தகுந்த அளவு நெய், எண்ணெய், மற்றும் வாசனைப் பொருள்களையும் யாக பூமிக்கு முன்னதாகவே அனுப்புவாயாக” என்று ஆணையிட்டார்.

பரதனின் பொறுப்பு

“மேலும் ஸ்ரீராமர், இந்த உணவுப் பொருள்களுடன், கோடிக்கணக்கான தங்க நாணயங்ளையும் யாகபூமிக்கு முன்கூட்டியே அனுப்புமாறு கூறினார்.

இவற்றைப் பின்தொடர்ந்து சமையல் லுநர்களும், கைவினைஞர்களும், ஆடல் பாடல் கலைஞர்களும், சிற்பிகளும், வணிகர்களும், வித்வான்களும், வைதிகர்களும், புரோகிதர்களும் அயோத்தி நகரப் பெரிவர்களும், பெண்களும், குழந்தைகளும் செல்லட்டும்’ என்றும் கட்டளையிட்டார்.

மேலும் இந்தப் பெருந்திரளான உணவுப் பொருட்ள்களையும், மற்ற செல்வங்களையும், மக்கள் கூட்டத்தையும், பாதுகாப்புடன் யாகபூமிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பை ஸ்ரீராமர் பரதனுக்கு அளித்தார்.

யாகம் முறையாகத் துவங்கும் முன்பே நைமிசாரண்யத்தில் அன்னதானம் துவங்கி விட்டது. சுக்ரீவனும், அவனுடைய வானர சேனையும் அனைவருக்கும் உணவு பரிமாறும் பணியில் ஈடுபட்டனர்; விபீஷணனும் அவனுடைய ராக்ஷச பரிவாரங்களும், அயோத்தி நகரப் பெண்களும் யாகத்திற்கு வருபவர்களை முறைப்படி வரவேற்கும் பணியில் ஈடுபட்டனர்.

யாகத்தை நடத்துவதற்கு முன்னர் யாக குதிரை, லக்ஷ்மணனின் பாதுகாப்பில் பூமியெங்கும் சுற்றி வர அனுப்பப்பட்டது. அதன் மூலம் மன்னர்கள் பலருடைய ராஜ்யங்களுக்குச் சென்று அவர்களின் சிறப்பு மரியாதைகளைப் பெறுவதற்கு ஏற்பாடானது. ஸ்ரீராமரின் வேள்விக் குதிரைக்கு ஆதரவு அளிப்பதால், அந்த அரசர்களின் கௌரவம் உயர்ந்ததேயன்றி, அவர்களின் ஆட்சிக்கோ அதிகாரத்திற்கோ குறையேதும் ஏற்பட வில்லை.

பின்னர் யாகத்தைத் தொடங்க ஸ்ரீராம நைமிசாரண்யத்திற்குப் புறப்பட்டார். யாகம் ஓராண்டு காலத்திற்கும் மேலாக
நடந்தது. இந்தக் காலம் முழுவதும் ஸ்ரீராம நைமிசாரண்யத்திலேயே தங்கியிருந்தார். அங்கு நடப்பனவற்றை மேற்பார்வையிட்டார். அரசர்கள் அனைவரும் அன்பளிப்புக்களுடன் யாகத்தில் பங்கேற்க வந்து சேர்ந்தார்கள். ஸ்ரீராமர் தாமே முன்னின்று அவர்களை உபசரித்து அவர்களது பரிசுகளை
ஏற்றார். பிறகு அதற்குப் பிரதியாக அவர் களுக்குச் சன்மானங்களை அளித்து விருந் தோம்பல் செய்தார். ஸ்ரீராமரின் உத்தரவுப்படி பரதனும், சத்ருக்னனும் அரசர்களைத் தகுந்த முறையில் கௌரவிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.

பூவுலகத்து அரசர் பெருமக்கள் அனைவரும் கூடிய இந்த யாகத்தில் மாபெரும் விருந்து ஓயாது தொடர்ந்து நடைபெற்றது. சுக்ரீவனும், விபீஷணனும் தங்கள் சேனைகளுடன் மிக நேர்த்தியுடனும், கவனத்துடனும், உற்சாகத்துடனும், இடையறாது அன்னமளிக்கும் பணியில் ஈடுபட்டார்கள்.

வானர சேனையும் ராக்ஷச சேனையும், விருந்தினர் கேட்பதற்கு முன்பே குறிப்பறிந்து வேண்டியதைப் பரிமாறிச் சிறப்பாக உபசரித்தார்கள்.

மகாகவி வால்மீகி, ஸ்ரீராமரின் அசுவமேத யாகத்தையும் மகிமை பொருந்திய அன்னதானத்தையும் இவ்வாறு வர்ணிக்கிறார்:

……..வேந்தர்களுள் சிங்கத்தை ஒத்த மகாபராக்கிரமசாலியான ஸ்ரீராமரின் இந்த மிகச் சிறந்த யாகம் உத்தமமான விதிகளை அனுசரித்துத் தொடர்ந்து நடைபெற்றது. மகாத்மாவான ஸ்ரீராமரின் அசுவமேத யாகத்தில் ‘அளியுங்கள், அளியுங்கள், யாசிப்போர் முழுமையான திருப்தி அடையும்வரை ஓயாது அளித்துக்கொண்டே இருங்கள்” என்ற ஒலி கேட்ட வண்ணம் இருந்தது.

நைமிசாரண்யத்தில் நடைபெற்ற இம்மாபெரும் அன்னதானம் மிகுந்த முழுமை பெற்றிருந்தது. எப்படியெனில், அங்கு திரண்டிருந்த பெரும் கூட்டத்தில் ஒருவர்கூட மெலிந்தோ, வாட்டமுற்றோ, வருத்தமுடனோ காணப்படவில்லை. அங்கு வந்திருந்த மக்கள் அனைவரும் நல்லூட்டம் பெற்றவர்களாய், திண்மையுடனும், நிறை வுடனும் காணப்பட்டார்கள்.

இந்த யாகத்தின்போது நடைபெற்ற மிகச் சிறப்பான அன்னதானம் ஒப்பற்ற தனித் தன்மையுடன் விளங்கியதை வால்மீகி பல சுலோகங்களில் வர்ணிக்கிறார். இறுதியில் அவர் ‘இந்த யாகம் ஓராண்டு காலத்திற்கும் அதிகமாக நீடித்த போதிலும் அக்காலம் முழுமையிலும் அங்கு ஒருவருக்கும் எந்தக்குறைபாடும் இருக்கவில்லை; எங்கெங்கும் எப்போதும் மிகுதியான நிறைவே பெருகியிருந்தது என்கிறார். இவை ராமராஜ்யத்தின் சிறப்பு எனப்படுகிறது.

ஸ்ரீராமர் பஞ்ச யக்ஞங்களையும்.. சரிவர
செய்தார். யாகம் இருந்தது; தேவர்கள் மனிதர்கள் உறவு செழித்தது. மன்னர்களும், அரச குமாரர்களும் நாட்டுமக்களுக்கு எல்லா வகையிலும் சேவை புரிந்தார்கள்.

ராமராஜ்யத்தில் எல்லாத் தரப்பு மக்களும் இணைந்து செயல்பட்டார்கள். களிப்பில் யாருக்கும் குறைவில்லை” வானரங்களும், அசுரர்களும் பொதுவாக அடக்க முடியாதவர்கள். ஆனால் ராமராஜ்யத்திலோ தாம் விருந்தாளிகளை திருப்தி செய்தார்கள்.

லட்சக்கணக்கான மக்களுக்கு ஒரு வருடத்திற்கு அன்னதானம் செய்ய முடிந்ததென்றால் ராம ராஜ்யத்தில் உணவு தானிய உற்பத்தி எப்படி இருந்திருக்கிறது பாருங்கள் கம்பன் சொல்கிறான்:

மரக்கலங்கள் (வியாபாரத்தால்) செல்வத்தைச் சுரந்தன; நிலம் நிறைய வளம் சுரந்தது; சுரங்கங்கள் கனிம வளம் சுரந்தன. குடிமக்களுக்கு எல்லாம் ஒழுக்கம் சுரந்தது. குலம்.(நாட்டுப்படலம், பாடல் 38)

‘குற்றம் இல்லாததால் அகால மரணம்” இல்லை; சிந்தனைச் செம்மையினால், சினம் இல்லை; அறம் மேலோங்கியிருந்ததால் ஏற்றம் இருந்தது; இழிதகவு இல்லாமல் போனது.(நாட்டுப்படலம், பாடல் 39)

‘வறுமை இல்லாததால் வள்ளல் தன்மை இல்லை; பகைவர் இல்லாததால் வீரசெருக்கு இல்லை; பொய் இல்லாததால் உண்மை இல்லை’ – என்று அயோத்தியில் இருப்பனவற்றையும் இல்லாதவற்றையும் பட்டியலிடுகிறான் கம்பன். (நாட்டுப்ப பாடல் 53)

சுருங்கச் சொன்னால் ஸ்ரீராமரின் மக்கள் நல அரசில் ‘இன்பமே எந்நாளும் துன்பமில்லை.

இப்படி இருந்தது ஸ்ரீ ராம ராஜ்ஜியம்! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.

Source: தமிழ் தினசரி | dhinasari.com

Leave a Reply