ஆவுடையார்கோயில் ஆத்மநாத சுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரைத் திருவிழா!

செய்திகள்
avudaiyarkoil margazhi vizha - Dhinasari Tamil

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோயிலில் உள்ள ஆவுடையார்கோயில் ஆத்மநாதசுவாமி கோயிலில் மார்கழி திருவாதிரைப் பெருந்திருவிழா நடைபெற்று வருகிறது. இதில் இன்று 4ம் நாள் திருவிழா நடைபெற்றது.

ஆவுடையார்கோயிலில் திருவாடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவாசகம் பிறந்த ஆத்மநாதசுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் மார்கழி திருவாதிரை திருவிழாவும் 24 குருமகா சன்னிதானத்தின் அருளாணைப்படி நடந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது திருவாதிரை திருவிழாவை முன்னி்ட்டு திருவாவடுதுறை 24வது குருமகா சன்னிதானம் அம்பலவாண தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் அருளாணைப்படி கட்டளை தம்பிரான் வேலப்பதேசிகர் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தினை தொடர்ந்து நேற்று 3ம் நாள் திருவிழாவில் இரவில் மாணிக்கவாசகர் பூத வாகனத்தில் ராஜ அலங்காரத்தில காட்சி கொடுத்தார் அபிஷேக அர்ச்சனைகளை ஆத்மநாதருக்கு நம்பியார்களும் மாணிக்கவாசகருக்கு சிவாச்சாரியார்களும் செய்தனர்.

ஏற்பாடுகளை தென்மண்டல மேற்பார்வையாளர் முத்துகிருஷ்ணன் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் மணியம் ராமன் ஆகியோர் செய்தனர். மாணிக்கவாசகரை மலரால் அலங்காரம் செய்து மேளதாளம் முழங்க திருவாசகம் படிக்க வீதி உலா தொடங்கி நான்கு வீதிகளை வலம் வந்து கோயிலை அடைந்தது இந்த வீதி உலாவில் சிவ தொண்டர்கள் வீதி உலாவை தொடர்ந்து சிவன் பாடல்கள் பாடி வந்தனர் நான்கு வீதிகளிலும் வீடுகளில் உள்ள பெண்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர் வான வேடிக்கைகளும் நடந்தது.பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆவுடையார்கோயில் போலீசார் செய்தனர்.

3ம் நாள் மண்டகப்படியை புதுக்கோட்டை சமஸ்தானம் ராஜாவிற்காக.. அரசூர் கிராமத்தார்கள் செய்தனர். வருகிற 2ந்தேதி மாணிக்கவாசகர் ரிஷபவாகனத்திலும் 4ந்தேதி திருத்தேரிலும் 5ந்தேதி வெள்ளி ரதத்திலும் காட்சி கொடுக்கிறார்.

Leave a Reply