மனிதனுக்கு வாழ்க்கையில் சுக துக்கங்கள், ஏற்ற தாழ்வுகள் எல்லாம் க்ரமமாக காலோசிதமாக வந்து கொண்டிருக்கிறது. அவற்றை சமசித்தத்தோடு இருந்து ஏற்றுக் கொள்ளவேண்டும். சுகத்தில் கண்ணை மூடிக்கொண்டு தூள் பரத்தவும் கூடாது. துக்கத்தில் மிகவும் பர்யாகுலமாகவும் இருந்து விடக்கூடாது.
எல்லாம் முன் செய்த கர்மாவின் பலன் என்று புரிந்து கொண்டு தன் கர்மத்தை செய்து கொண்டு, பகவானை மனம் தளராமல் சேவித்து வரவேண்டும். சிலர் சுகத்தில் தன்னையே பாராட்டிக்கொண்டு, துக்கம் வரும் சமயத்தில் மட்டும் பகவானை ஆஷேபனை செய்வார்கள். இது நியாயமில்லை. பகவான் எல்லாருக்கும் ஒரே போலத்தான் இருந்து வருகிறார். அவருக்கு சிலரை பிடிக்கும். சிலரை பிடிக்காது என்று ஒன்றும் கிடையாது. அதற்குத்தான் அவரை ‘பகவான்’ என்று அழைக்கிறோம். ஆகையால் எந்த பரிஸ்திதிலேயும், அவரை சேவித்து வரும் பக்தனை அவருக்கே ப்ரியமாகிவிடுகிறான். இதைத்தான் கீதையில்,
என்று பகவத்பாதர் கீதையின் ஸ்லோகத்திற்கு விளக்கம் கூறியிருக்கிறார். ஆகையால் சுகதுக்கங்களுக்கு, முன் செய்த புண்யபாபங்கள்தான் காரணம் என்று புரிந்து கொண்டு யாரையும் குற்றம் கூறாமல், பகவானைத் தீவிர பக்தியோடு எல்லாரும் சேவித்து பகவானுக்கு ப்ரியமாக இருந்து வர ஆசிர்வதிக்கிறோம்.