ராஜேந்திர சோழன் ஈழத்து அரசனை வென்று அவனது மணிமகுடத்தையும், தேவியரின் மணிமகுடத்தையும் பறித்து வந்ததும், முதல் பராந்தகச் சோழன் பாண்டியர் மீது படையெடுத்து வெற்றி கண்டபோது, சுந்தரபாண்டியனால் ஈழத்தில் மறைத்து வைக்கப்பட்ட பாண்டியர் மணிமுடியை மீட்டு வந்த செய்தியையும் மேலும் சிங்கள அரசனையும், இரட்டபாடி மன்னனையும், கோசல நாட்டையும், மலைநாடு (கேரளம்), மற்றும் கலிங்க நாட்டையும் வென்ற செய்திகள் குறித்து
இக்கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது.
மேலும் ராஜேந்திர சோழன் தேவியரால் திருவண்ணாமலை உடைய நாயனாருக்கு நிவந்தங்கள் அளிக்கப்பட்ட செய்தியும் இடம் பெற்றுள்ளது. இக் கல்வெட்டு தல விருட்சம் அருகே பக்தர்களின் பார்வைக்காக கோயில் நிர்வாகம் சார்பில் வைக்கப்பட்டுள்ளது.