கட்டவாக்கம் நரசிம்ம சுவாமி கோயில் குடமுழுக்கு

செய்திகள்

காஞ்சிபுரம், மே 9: காஞ்சிபுரம் அருகே உள்ள கட்டவாக்கம் ஸ்ரீ விஸ்வரூபா லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் குடமுழுக்கு விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

இவ் விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. நித்ய ஹோமங்கள் உள்ளிட்டவையும் நடைபெற்றன. பின்னர் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இவ் விழாவில் கோயில் குருக்கள் கலசத்துக்கு புனித நீர் ஊற்றினர். பின்னர் மலர் தூவி தீபாராதனை காட்டினர்.

சுற்று வட்டார பகுதிகளில் இருந்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

Leave a Reply