682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
விக்கிரமங்கலம் கிராமத்தில் ஐந்து பேர் ஆண்டித்தேவர் வகையறா, நமச்சிவாயம் பிள்ளைகள் வகையறா, நல்ல பிள்ளைத்தேவர் வகையறா ஆகியோருக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ அங்காள ஈஸ்வரி அருள்மிகு கருப்புசாமி மற்றும் பரிவார தேவதைகள் ஆலய அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் மூன்று நாட்கள் நடைபெற்றது.
மகா கும்பாபிஷே விழாவை முன்னிட்டு கடந்த வாரம் எட்டூர் கிராம பொதுமக்கள் காப்பு கட்டி விரதம் இருந்து வந்தனர். இந்த கோவிலைச் சேர்ந்த பங்காளிகள் ராமேஸ்வரம்,அழகர் கோவில், கொடுமுடி உட்பட 11 ஊர்களில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்து யாகசாலை அன்று புனித நீர் குடங்களில் தீர்த்தங்களை நிரப்பி வைத்து யாகசாலை மண்டபம் ஜோடித்து வைத்தனர்.
மூன்று நாட்கள் கணேச சாஸ்திரிகள் கும்பகோணம் 13 முரளி கிருஷ்ண சாஸ்திரிகள் குழுவினர்கள் யாக பூஜை நடத்தினர். நேற்று அதிகாலை முதல் விக்கிரமங்கலம் உட்பட எட்டூர் கிராம மக்கள் மேளதாளத்துடன் வானவேடிக்கையுடன் பெண்கள் குடத்தில் மஞ்சள் நீர் நிரப்பி வேப்பிலை எடுத்து வந்தனர்.
இவர்களுடன் ஆண்கள் ஒவ்வொருவரும் சோகையுடன் கரும்பு கொண்டு வந்தனர். எட்டுர் பக்தர்கள் கொண்டு வந்த மஞ்சள் நீர் பொது மக்களுக்கு தெளிக்கப்பட்டது யாக சாலையில் இருந்து வானவேடிக்கை மேள தாளத்துடன் சாஸ்திரிகள் புனித நீர் குடங்களை எடுத்து கோபுர கலசத்திற்கும், குதிரையில் இருந்த கருப்புசாமிக்கும், அங்காள ஈஸ்வரிக்கும் மற்றும் பரிவார தேவதைகளுக்கும் மகா கும்பாபிஷேகம் நடத்தினர.
சுப நிகழ்ச்சிகளுக்கு மாமன் சீர் கொண்டு வருவது போல் அங்காள ஈஸ்வரி கருப்புசாமி கோவில் மகா கும்பாபிஷேகத்தில் கச்சிராயிருப்பு கிராமத்தில் இருந்து வானவேடிக்கை மேளதாளத்துடன் கொடி பிடித்து சீர்வரிசை கொண்டு வந்தனர்.இவர்களை திருப்பணி குழுவினர் எட்டூர் கிராம மக்கள் வரவேற்றனர்.
சீர்வரிசை கொண்டு வந்த மாமன் மச்சான் கிராமத்தினருக்கு விழா குழுவினர் மரியாதை செய்தனர். சிறப்பு பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
இதில் தேனிநாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன், உசிலம்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அய்யப்பன், முன்னாள் எம்எல்ஏ கதிரவன், அதிமுக மாநில அமைப்பு செயலாளர் மகேந்திரன், திண்டுக்கல் மேயர், இளமதி ஜோதி பிரகாஷ் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் பாலாஜி, செல்லம்பட்டி ஒன்றிய திமுக ஒன்றிய செயலாளர் சுதாகரன், செல்லம்பட்டி அதிமுக ஒன்றிய செயலாளர் எம் வி பி ராஜா உள்பட எட்டூர் கிராம பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் 10 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
உசிலம்பட்டி டிஎஸ்பி செந்தில்குமார், செக்கானூரணி இன்ஸ்பெக்டர் திலகரணி, விக்கிரமங்கலம் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு ஏற்பாடு செய்திருந்தனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை திருப்பணிகுழு மற்றும் விக்கிரமங்கலம் எட்டூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.