சிதம்பரம் நடராஜர் கோயிலில் ருத்ராபிஷேகம்

செய்திகள்

திருஞானசம்பந்தர் பெருமான் பாடல்களை கே.ஜே.ஜேசுதாஸ் பாடியுள்ளார். குழந்தை ஞானசம்மந்தருக்காக, சின்னத்திரை வரலாற்றில் குழந்தைப் பின்னணி நட்சத்திரமாக விளங்கும் ஸ்ரீநிஷா பாடியுள்ளார். திருநீலகண்ட பெருமானுக்காக பிரபல பாடகர் சங்கர்மகாதேவன், காரைக்கால் அம்மையாருக்காக பிரபல பாடகி சாதனா சர்ஹம், சுந்தரரின் மனைவி பரவையருக்காக டாக்டர் நித்யாஸ்ரீ மகாதேவனும் பாடியுள்ளனர்.

தற்போது படிப்பிடிப்பு முடிவுற்று தொலைக்காட்சி முன்னணி நிறுவனத்தின் ஒப்புதலுக்காக காத்துக் கொண்டிருக்கிறது. விரைவில் பிரபல தொலைக்காட்சியில் திருத்தொண்டர் புராணம் நெடுந்தொடராக வெளியிடப்படவுள்ளது.

இந்த திருத்தொண்டர்புராணம் நெடுந்தொடர் எவ்வித தடங்களும் இன்றி சிறப்புற வேண்டி நடராஜர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை உ.வெங்கடேசதீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்களால் ருத்ராபிஷேகம் என்ற மகாயாகம் நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திரளான சிவனடியார்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply