To Read it in other Indian languages…
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 11 நாட்கள் திருவிழா நடைபெற்று 13ஆம் தேதி பூக்குழி திருவிழா நடைபெற உள்ளது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரெளபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் அருள்மிகு திரெளபதி அம்மன், ஸ்ரீ தர்மர், ஸ்ரீ பீமன், ஸ்ரீ அர்ஜுனன், ஸ்ரீ நகுலன் ஸ்ரீ சகாதேவன், பகவான் ஸ்ரீ கண்ணன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.
இக்கோவிலின் கொடியேற்றம் இன்று காலை துவங்கியது. கோவில் கொடி மற்றும் பூஜைப் பொருட்களுடன் ஊர் சுற்றி வந்து காலை அம்மனுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.
கொடிமரத்தில் பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு கொடியேற்றப்பட்டது. விளைந்த நெற்கதிர்கள் கொடிமரத்தை சுற்றி கட்டப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. 10 நாட்கள் திருவிழா மண்டகப்படிதாரர்கள் மற்றும் கோவில் தர்மகர்த்தா ஏ.ஆர்.தசரத ராஜா உள்பட ஏராளமானோர் பங்கேற்று வழிபாடு நடத்தினார்கள்.