குருப் பெயர்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஹோமம்

செய்திகள்

பல்வேறு சிறப்புகளை உடைய இக்கோயிலில் குரு பகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பிரவேசம் செய்யும் நாளில் குருப் பெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

நிகழாண்டு ஞாயிற்றுக்கிழமை இரவு குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை முன்னிட்டு, இக் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

விழாவின் தொடக்கமாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குரு பரிகார ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து, அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

ஸ்ரீ குரு பகவானுக்கு தங்கக் கவச அலங்காரமும், ஸ்ரீ கலங்காமல் காத்த விநாயகர், ஸ்ரீ ஆபத்சகாயேசுவரர், ஸ்ரீ ஏலவார் குழலியம்மன், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சுப்பிரமணியர் ஸ்ரீ மகாலட்சுமி உள்ளிட்ட சன்னதிகளில் சந்தனக் காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது.

குரு பகவான் பெயர்ச்சியடையும் நேரமான நள்ளிரவு 12.48 மணிக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குரு பகவானை தரிசனம் செய்தனர்.

கோயிலில் குருப் பெயர்ச்சியின் இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை விழா வரும் 12-ம் தேதி தொடங்கி, 22-ம் தேதி வரை நடைபெறும்.

Leave a Reply