தேஹ, லோக வாஸனைகளை நாம் அகற்றிவிட வேண்டும். சாஸ்திர வாஸனையில் உள்ள பாட வ்யஸனம், சாஸ்திர வ்யஸனம் மற்றும் அனுஷ்டான வ்யஸனம் ஆகியவை.
நாம் இப்போது இருக்கும் நிலையில், ஓரளவு இருக்க வேண்டியதுதான். ஆனால், நாம் இதிலிருந்து முன்னேறி உத்தமமான நிலையை அடைந்து விட்டோமென்றால், பிறகு நாம் சாஸ்திர வாஸனையையும் விட்டு விட்டு நிதித்யாஸனத்திலேயே இருந்து விடலாம். இதுதான் சாஸ்திரத்தின் தத்துவம்.
இதைத் தெரிந்துகொண்டு நாம் கூடிய வரையிலும் நம்முடைய வாழ்க்கையில் இவற்றை அனுஷ்டானத்திற்குக் கொண்டு வந்து சிரேயஸ்ஸை அடைய வேண்டும்.
ஈச்வரனின் நினைவு இல்லாமல் ஒரு முஹூர்த்தம் (48 நிமிடங்கள்) கழிந்து விட்டதென்றால், நம்முடைய பணத்தைத் திருடர்கள் திருடிக் கொண்டு போய்விட்டால் நாம் எவ்வளவு துக்கப்படுவோமோ அவ்வளவு துக்கப்பட வேண்டும்.
இது நாம் இருக்க வேண்டிய நிலை. “நாம் பூஜை செய்யும் சமயத்திலோ அல்லது பாராயணம் செய்யும் சமயத்திலோ நம்முடைய மனம் அதிலேயே இருக்கின்றதா? அல்லது வேறு எங்காவது யோசனை செய்கின்றதா? மனம் வேறு எங்கும் யோசனை செய்யாமல் ஈச்வரனின் விஷயத்தில் மட்டுமே ஈடுபட்டிருந்தது என்று எந்த நேரத்தை நிச்சயமான நம்பிக்கையுடன் கூறுவோமோ அந்த நேரத்தைத்தான் பகவானை நினைத்த நேரமாகக் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியும்.
இந்தக் கணக்கின்படி நாம் ஒரு முஹூர்த்தம்கூட ஈச்வர சிந்தனை செய்வதில்லை” என்று கூறுகிறேன். எதற்காகக் கூறுகிறேன் என்றால், ஈச்வரனை மிகவும் பக்தியுடனும் ஸ்ரத்தையுடனும் நினைத்தால் அதனுடைய பலனே தனி.
ஸ்ரத்தா பக்தியின் பலன்: ஆச்சார்யாள் அருளுரை! முதலில் தினசரி தமிழ் தளத்தில் வெளியான செய்தி.