திட்டையில் குருப் பெயர்ச்சி வழிபாடு

செய்திகள்

பகலில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் குரு பகவான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நள்ளிரவில் குரு பகவான் பெயர்ச்சியான நேரத்தில் அபிஷேகம் முடிந்ததும், வெள்ளிக்கவசம் பொருத்தி தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் வசதிக்காக சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன. குருப் பெயர்ச்சியையொட்டி, மே 19-ம் தேதி லட்சார்ச்சனை நடைபெற உள்ளது. மேலும், மே 20 முதல் 22-ம் தேதி வரை மூன்று நாள்களுக்கு பரிகார ஹோமங்கள் நடைபெற உள்ளன.

Leave a Reply