தக்கோலத்தில் குருபெயர்ச்சி விழா

செய்திகள்

குரு பகவான் மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தரிசனம் நடைபெறும். மேலும் தொடர்ந்து மூன்று நாள்களுக்கு லட்சார்ச்சனை வைபவமும் நடைபெறும்.

இந்த குரு பெயர்ச்சியினால் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், கும்பராசிக்காரர்கள் உரிய பரிகாரம் செய்து கொள்ளலாம். தமிழ் நாட்டில் மூன்றாவது குரு ஸ்தலமாக போற்றப்படும் தக்கோலம் வேலூர் மாவட்டம், அரக்கோணம் அருகில் உள்ளது. சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்திலிருந்து பூந்தமல்லி வழியாக பஸ் வசதிகள் உள்ளன.

Leave a Reply