செண்பகவல்லி அம்மன் கோயிலில் தெப்பத் திருவிழா

செய்திகள்

11-ம் திருநாளான வெள்ளிக்கிழமை தெப்பத் திருவிழா நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு, சுவாமி – அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலையில், ரிஷப வாகனத்தில் சுவாமி – அம்பாள் திருவீதியுலா செண்பகவல்லி அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்டு, பிரதான சாலை அடைக்கலம்காத்தான் மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக தெப்பத்தை வந்தடைந்தது.

அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமி, அம்பாள் திருக்குளத்தில் பவனி வந்தனர்.தெப்பத்தில் சுவாமி – அம்பாள் பவனி வரும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை இரவு சுமார் 9.45 மணியளவில் தொடங்கியது. மங்கள இசை முழங்க 2 சுற்றுக்களும், வேதபாராயணம் பாடும்போது 3 சுற்றுக்களும், தேவாரம் பாடும்போது 3 சுற்றுக்களும், மீண்டும் மங்கள இசையுடன் ஒரு சுற்றோடு தெப்பத் திருவிழா நிறைவுபெற்றது.

Leave a Reply