சிதம்பரம், ஏப். 17: சிதம்பரம் நடராஜர் கோயிலிலும், தருமபுரம் ஸ்ரீஞானபுரீஸ்வரசுவாமி கோயிலிலும் சந்தானாச்சாரியருள் ஒருவராகிய ஸ்ரீ உமாபதி தேவ நாயனாருக்கு குருபூஜை விழா இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதை முன்னிட்டு இரு கோயில்களிலும் விசேஷ அபிஷேக ஆராதனைகளும், மாலை சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.
