அழகர்கோவில்: சித்திரைத் திருவிழாவுக்கு நாளை ஏப்-3ல் பந்தக்கால் நடும் வைபவம்

செய்திகள்

 அழகர்கோவிலில் ஏப். 14, 15 ஆகிய இரு தினமும் சன்னதியிலிருந்து புறப்பட்டு சன்னதிக்கே திரும்பி விடுகிறார். பின்னர் தங்கப் பல்லக்கில் ஏப். 16-ம் தேதி மாலை 6 மணியளவில் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி திருக்கோயில் மண்டபத்திலிருந்து மதுரை புறப்படுகிறார்.
 அழகர்கோவிலில் இருந்து வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டபங்களுக்கு கள்ளழகர் எழுந்தருள்கிறார். மூன்றுமாவடியில் ஏப். 17-ம் தேதி காலை கள்ளழகரை பக்தர்கள் வரவேற்கும் எதிர்சேவை நடைபெறுகிறது. மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோயிலில் இரவு தங்கியிருந்து 18-ம் தேதி காலை வைகைக்கு எழுந்தருளுகிறார்.
 அன்று இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் திருக்கோயிலில் தங்குகிறார். ஏப். 19-ம் தேதி காலை தேனூர் மண்டபத்துக்கு எழுந்தருளி நாரைக்கு முக்தியளிக்கும் வைபவம் நடைபெறுகிறது. அன்று இரவு தசாவதார நிகழ்ச்சி ராமராயர் மண்டபத்தில் நடைபெறுகிறது. ஏப். 20-ம் காலை புறப்பாடாகி வழிநெடுகிலும் உள்ள திருக்கண் மண்டபங்களுக்கு எழுந்தருளிய பின்னர் இரவு ராமநாதபுரம் மன்னர் மண்டபத்தில் தங்குகிறார்.
 ஏப். 21-ம் தேதி அதிகாலை பூப்பல்லக்கில் புறப்பாடாகிறார். பின்னர் வழிநெடுகிலும் உள்ள மண்டபங்களுக்கு எழுந்தருளி இரவு அப்பன்திருப்பதி வந்தடைகிறார். அங்கிருந்து மறுநாள் 22-ம் தேதி காலை புறப்பாடாகி அழகர்கோவில் வந்தடைகிறார். இந்த ஆண்டு அருள்மிகு சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் 404 திருக்கண் மண்டபங்களுக்கு எழுந்தருளுகிறார்

Leave a Reply