ஸ்ரீவீரமாகாளியம்மன், ஸ்ரீமுனீஸ்வர சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

செய்திகள்

 கும்பகோணம் பழைய அரண்மனைத் தெருவில் ஸ்ரீவீரமாகாளியம்மன், ஸ்ரீமுனீஸ்வரர் எழுந்தருளி கோயில் உள்ளது.
 இக்கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வெள்ளிக்கிழமை காலை 8.40 மணிக்கு நடைபெற்றது.
 மார்ச் 3 0 ஆம் தேதி அதிகாலை கணபதி ஹோமம், பூஜையுடன் விழா தொடங்கியது. வெள்ளிக்கிழமை காலை வரை 4 காலம் யாகபூஜைகள் நடைபெற்று, கடங்கள் புறப்பட்டு முனீஸ்வரர் ஆலய விமான மகா கும்பாபிஷேகமும், மூல மூர்த்தி மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து வீரமாகாளியம்மன் ஆலய விமான கும்பாபிஷேகமும், மூல மூர்த்திகள் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து மகா அபிஷேகம் நடைபெற்றது.

Leave a Reply