கொம்மந்தாபுரம் பத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நாளை தொடக்கம்

செய்திகள்

 அன்று காலை சிறப்பு அபிஷேகம், பால்குடம் எடுத்தல், விநாயகர் வீதி உலா நடைபெறும். இரவு சாமியாடிகள் அழைப்பும், இரவு 12 மணிக்கு காப்புக் கட்டுதலும், தொடர்ந்து குடைச்சப்பரத்தில் மாரியம்மன் வீதி உலாவும் நடைபெறும்.
 திங்கள்கிழமை இரவு தட்டிச்சப்பரத்தில் பத்திரகாளியம்மன் அக்னி சட்டியுடன் வீதி உலா நடைபெறும்.
 ஏப்.5-ம் தேதி மாலை கோவில் முன்பு உள்ள திடலில் வேதபாராயண முறைப்படி அக்னி வளர்த்தலும், இரவு 12 மணிக்கு பத்திரகாளியம்மன், மாரியம்மன் புஷ்ப ரதத்தில் வீதி உலாவும் நடைபெறும்.
 தொடர்ந்து இரவு 3 மணிக்கு வானவேடிக்கைகளுடன் பூக்குழி இறங்கும் புனிதக் காட்சி நடைபெறும்.
 ஏப்.14-ம் தேதி மாலை முனியப்பசாமிக்கு பொங்கலிடுதலும், இரவு குடைச்சப்பரத்தில் பத்திரகாளியம்மன், மாரியம்மன் வீதி உலாவும் நடைபெறும்.
 விழா ஏற்பாடுகளைத் தலைவர் செல்லத்துரை நாடார் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

Leave a Reply