ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் பகல்பத்து உத்ஸவத்தின் நான்காம் நாளான இன்று நம்பெருமாள் அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளினார்.
நாச்சியார் திருமொழி – கண்ணன் என்னும் கருந்தெய்வம் பாசுரத்திற்கு ஏற்ப, ஆண்டாள் கொண்டை அணிந்து, நாச்சியார், அழகிய மணவாளன் பதக்கம், மகரி, சந்திரஹாரம், வயிர மூன்று அடுக்கு மகர கண்டிகை, அடுக்குப் பதக்கங்கள், வைர அபய ஹஸ்தத்துடன், செந்தூர வர்ண வஸ்திரம், தங்கப்பூண் பவள மாலை, இரண்டு வட பெரிய முத்துச் சரம், பொட்டு நெல்லிக்காய் மாலை இவற்றை முன் மார்பில் சாற்றிக் கொண்டு,பின் சேவையாக – பங்குனி உத்திர பதக்கம், புஜ கீர்த்தி, தாயத்து தொங்கு சரம் கைகளில் சாற்றி சேவை சாதித்தார்.
படம்: – ஸ்ரீரங்கம் அரங்கன்
Related
Related