மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் திருவிழா: போக்குவரத்து மாற்றம்

செய்திகள்

இதன்படி மேற்கூறிய நாட்களில், லஸ் ரவுண்டானாவில் இருந்து ஆர்.கே மடம் சாலைக்கு வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது. மேலும், கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெருவுக்கும், டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலைக்கும், புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே. மடம் சாலைக்கும், சித்திரகுளம் கிழக்கில் இருந்து சித்திரகுளம் வடக்கு தெருவுக்கும், மந்தவெளி சாலையில் இருந்து ஆதம் தெருவுக்கும், தென்கூர் செல்வ விநாயகர் கோயில் தெருவுக்கும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.
மேலும், மயிலாப்பூர் கோயில் குளம் அருகேயுள்ள மாநகரப் பேருந்து நிறுத்தம், தற்காலிகமாக லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகே மாற்றப்பட்டுள்ளது.

Leave a Reply