கோவில் அருகில் உள்ள குளத்தில் இந்த தெப்ப உற்ஸவத் திருவிழா நடைபெறும். முதல் நாளான 15-ம் தேதி ராமர், சீதை, லட்சுமணன், அனுமன் ஆகியோரும், இரண்டாம் நாளான 16-ல் கிருஷ்ணன், ருக்மணி ஆகியோரும், 17, 18, 19 ஆகிய தேதிகளில் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி, பூதேவி ஆகியோரும் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஒவ்வொரு நாளும் மாலையில் தெப்ப உற்சவத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர். இதில் கலந்து கொள்ள கட்டணம் ரூ.2,500/-. இதில் 5 பேர் பங்கேற்கலாம். தெப்போற்ஸவம் நடக்கும் 5 நாளும் கோவிலில் நடைபெறும் கட்டண சேவைகளில் ஒன்றான சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.