682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
திருச்சி: சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் புரட்டாசி மாத பௌர்ணமி 108 திருவிளக்கு பூஜை.
திருச்சி சமயபுரம் சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஸ்தலங்களில் முக்கியமான ஸ்தலமாக திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது இக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் இந்தியாவின் பல்வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்களும் வெளிநாட்டவர்கள் வந்து மன நிம்மதிக்காகவும் ,வேண்டுதல்களுக்காவும் சாமி தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்தி செல்கின்றனர் .
இந்நிலையில் நேற்று ஐப்பசி மாத பௌர்ணமியை முன்னிட்டு கோயில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் நேற்று மாலை 108 பெண்கள் உலக நன்மைக்காக 108 திருவிளக்கு பூஜை செய்தனர்.
இந்து சமய அறநிலைத்துறை அறிவிப்பின்படி பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் மாதந்தோறும் பௌர்ணமி அன்று திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது.
ஐப்பசி மாதம் பௌர்ணமி நாளான நேற்று சக்தி ஸ்தலங்களில் பிரசித்தி பெற்றதும் முதன்மையானதுமான சமயபுரம் மாரியம்மன் கோவிலில் அதிகாலையில் நடைத்திறக்கப்பட்டு மூலவர் மற்றும் உற்சவர் மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதனைத் தொடர்ந்து மாலை 6 மணி அளவில் பெண்களுக்கு நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டு 108 பெண்கள் திருவிளக்கு ஏற்றி உற்சவர் மாரியம்மன் முன்பு பூஜை நடைபெற்றது.
ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் உற்சவர் மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்து சமய அறநிலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த திருவிளக்கு பூஜையின் முடிவில் திருச்சி மாவட்டம் மட்டும்மல்லாது வெளி மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டு சென்றனர்.
மேலும் அறங்காவல் குழு தலைவர் இளங்கோவன், கோயில் இணை ஆணையர் பிரகாஷ், அறங்காவல் குழு உறுப்பினர்கள் சுகந்தி, பிச்சைமணி, லட்சுமணன் உதயம் ரவி கோயில் குத்து விளக்கை ஏற்றி 108 திருவிளக்கு பூஜையை துவங்கி வைத்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இணை ஆணையர் உத்தரவின் பேரில் கோவில் பணியாளர்கள் மற்றும் குருக்கள் செய்து இருந்தனர்.