682386321" data-ad-slot="4501065173" data-ad-format="auto" data-full-width-responsive="true">
மதுரை மாவட்டக் கோயில்களில், இம் மாதம் 15-ல் அன்னாபிஷேகம்!
மதுரை மாவட்ட கோவில்களில், இம்மாதம் 15- ஆம் தேதி வெள்ளிக்
கிழமை, ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
ஆண்டு தோறும், ஐப்பசி பவுர்ணமி அன்று சிவனுக்கு அன்னாபிஷேகம் செய்வது வழக்கம். அதன்படி, இம்மாதம் 15- ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, மதுரை மாவட்டத்தில் கோயில்களில் அன்னாபிஷேகம் சிவனுக்கு நடைபெறுகிறது. இதை ஒட்டி, சிவபெருமானுக்கு பக்தர்களால் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு, அதை அடுத்து, அன்னா அபிஷேகம் நடைபெறும். தொடர்ந்து, சிவபெருமான் அலங்கரிக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதை அடுத்து, பக்தர்களுக்கு அர்ச்சனை செய்யப்பட்டு, கோவில் நிர்வாகம் சார்பில் பிரசாதங்கள் வழங்கப்படும்.
இரவு, சிவன் மீது செய்யப்பட்ட அன்னா அபிஷேகத்தை, கோயில் சிவாச்சாரியார்கள் தட்டில் வைத்து ஊர்வலமாக சென்று, நீர் நிலைகளில் கரைப்பது வழக்கம்.
அதே போல, மதுரை மாவட்டத்தில், சோழவந்தான் சிவன் ஆலயத்தில் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு, அன்னா அபிஷேகம் நடைபெறுகிறது. இதே போல, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம்,
மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயம், இம்மையில் நன்மை தருவார் திருக்கோவில், பழைய சொக்கநாதன் திருக்கோவில், மதுரை அண்ணாநகர் சர்வேஸ்வர ஆலயம் , மதுரை அண்ணா நகர் தாசில்தார் நகர் சௌபாக்கிய விநாயகர் ஆலயம், சித்தி விநாயகர் ஆலயம்,
வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயம் , மதுரை ரிங் ரோடு ஜே. ஜே. நகர், விநாயகர் ஆலயம் ஆகிய கோள்களில் ஐப்பசி பவுர்ணமி முன்னிட்டு, அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். சோழவந்தான் அருகே, திருவேடகம் ஏடகநாதர் சுவாமி ஆலயம், பெண்களை மூலநாதர் சுவாமி ஆலயம், திருமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயம் ஆகிய கோவில்களிலும் ஐப்பசி பௌர்ணமி முன்னிட்டு, சிவனுக்கு அன்னா
பிஷேகம் நடைபெறுகிறது.