திருப்பாணாழ்வார்

திருப்பாணாழ்வார்
திருப்பாணாழ்வார் style="text-align: center;">திருப்பாணாழ்வார்

கார்த்திகையில் உரோகிணி நாள் காண்மின் இன்று காசினியீர்! *

வாய்த்த புகழ்ப் பாணர் வந்துதிப்பால் * –  ஆத்தியர்கள்

அன்புடனே தான் அமலனாதிபிரான் கற்றதற்பின்*

நன்குடனே கொண்டாடும் நாள்.

 

அவதரித்த ஊர் : உறையூர்

மாதம் : கார்த்திகை

நட்சத்திரம் : ரோஹிணி

அம்சம் : ஸ்ரீவத்ஸாம்சம்

அருளிச் செய்த பிரபந்தம் : அமலனாதிபிரான்

—–

(குருபரம்பரைப்படி…)

கார்த்திகே ரோஹிணீ ஜாதம் ஸ்ரீபாணம் நிகளாபுரே

ஸ்ரீவத்ஸாம்சம் காய கேந்த்ரம் முநிவாஹந மாச்ரயே.

 

ஸ்ரீவத்ஸாம்சராய் கலியுகம் 343-வதான துன்மதி வருஷம் கார்த்திகை மாசம் க்ருஷ்ணபக்ஷம் த்விதீயை புதன்கிழமை ரோகிணி நட்சத்திரத்தில் உறையூரின் புறத்தில் செந்நெல் பயிரில் அயோநிஜராய் அவதரித்து ஓர் பாணனால் கண்டெடுக்கப்பட்டு வளர்ந்து வந்தார். காண்பனவும் உரைப்பனவும் மற்றொன்றின்றி கண்ணனையே கண்டுரைத்த கடிய காதலாய் அருளிச் செய்தார்.

இவர் அருளிச் செய்தது அமலனாதிபிரான் 10 பாசுரங்கள்.

மங்களாசாஸனம் செய்தருளிய திவ்யதேசங்கள்-2.{jcomments on}

Leave a Reply