அலங்காநல்லூர் அருகே செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

செய்திகள் விழாக்கள் விசேஷங்கள்

மதுரை ரவிச்சந்திரன்

madurai-alankanallur-kumbabishekam.jpg

அலங்காநல்லூர்: மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் உட்கடை கம்மாளபட்டி வலசை கிராமத்தில், அமைந்துள்ள ஶ்ரீ செல்வ விநாயகர்,
வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், லட்சுமி, சரஸ்வதி, உள்ளிட்ட
பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இரண்டு நாட்கள் நடந்த இந்த யாகசாலை பூஜையில், மங்கல இசை முழங்க ஆனுக்கை, பூஜை, வாஸ்து சாந்தி, லட்சுமி, சரஸ்வதி, துர்கா பூஜை, பூர்ணாகுது தீபாரதணை நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து, இரண்டாம் கால யாக பூஜையுடன் மேலதாளம் முழங்க கடம் புறப்பாடாகி, கோவிலை சுற்றி வலம் வந்து பின் கோபுர உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டு, புனித தீர்த்தங்கள் கலசங்கள் மீது ஊற்றபட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை, கிராமத் தலைவர் எழு கொத்து வகையறாக்கள், கிராம  பொதுமக்கள் செய்திருந்தனர்.

Leave a Reply